நாட்டினை முன்னோக்கிக்கொண்டு செல்ல ஊடகவியலாளர்களுக்கு அதிக பங்குண்டு - யாழ்.மாவட்ட செயலர்

Published By: Vishnu

01 Feb, 2024 | 02:47 PM
image

சமூகத்தை எப்போதும் ஒரு கொந்தளிப்பான நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு தற்போதுள்ள ஊகவியலாளர்கள் செயற்படுகின்றார்கள் என யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (01) ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,   

தற்போதுள்ள நெருக்கடி நிலையில் நாட்டினை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்லலாம். எமது பிரதேசத்தில், சவாலான விடயங்களான டெங்கு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடலாம்.

ஆனால் தற்போது இருக்கிற பிரச்சினையை இன்னும் கொஞ்சம் ஊதிப் பெருப்பித்து விட்டால், செய்தி கொஞ்சம் பரபரப்பாக போகும் என ஊடகவியலாளர்கள் செயற்படுகிறார்கள்.

அந்த விடயம் மாற்றப்பட வேண்டும். முதுகில் புண் இருந்தால் தான் காடு நுழைய பயம் என்று கூறுவார்கள். என்னுடைய முதுகில் புண் இல்லை.

நான் எதற்குள்ளும் புகுந்து விடுவேன்.   ஆனால் முதுகில் புண்ணை ஏற்படுத்துகின்ற வேலையை தற்பொழுது ஊடகவியலாளர்கள் செய்கின்றார்கள். மறைமுகமாக அச்சுறுத்துகின்றார்கள்.

ஊடகவியலாளர்கள் தான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அந்த பொறுப்பை சரியாக நீங்கள் செய்ய வேண்டும்.

நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதில் ஊடகவியலாளர்களுக்கும் அதிக பங்கு உண்டு. எனவே எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'முழு நாடும் ஒன்றாக' தேசிய திட்டத்தின்...

2026-07-18 18:11:25
news-image

அடுத்த வாரம் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை:...

2026-07-18 15:53:51
news-image

இராணுவத்தினரால் பறிக்கப்பட்ட மக்களின் காணி நிலங்களை...

2026-07-18 17:50:29
news-image

ஒட்டுசுட்டான் - தண்டுவான் பகுதியில் வீடுத்திட்டத்திற்கு...

2026-07-18 18:08:56
news-image

கரும்புள்ளியான் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப்...

2026-07-18 17:00:56
news-image

சி.டி. விக்கிரமரத்ன மரணம் : 10-க்கும்...

2026-07-18 16:38:27
news-image

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 25ஆவது...

2026-07-18 15:53:31
news-image

நாட்டில் தீவிரமடையும் டெங்கு : கடந்த...

2026-07-18 15:27:10
news-image

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகலவின்...

2026-07-18 15:20:54
news-image

நுளம்பு பெருக வழிவகுக்கும் சூழலை வைத்திருப்போர்...

2026-07-18 15:08:08
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்னுடன் மலேசிய...

2026-07-18 14:53:23
news-image

சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில்...

2026-07-18 14:41:15