(எம்.மனோசித்ரா)
அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு பணம் இல்லையெனக் கூறுகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நெல் களஞ்சியசாலை மாபியாக்கள் மிகக் குறைந்தவிலையில் நெல்லைக் கொள்வனவு செய்து, விவசாயிகளை நெருக்கடிக்கு உள்ளாக்க தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வர்த்தக அமைச்சர் அரிசி இறக்குமதி செய்யப்படும் என்று கூறிய போது, விவசாயத்துறை அமைச்சர் அதனை மறுத்தார். ஆனால் தற்போது சுமார் 50,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஒருபுறம் அருவடை ஆரம்பித்துள்ள நிலையில், மறுபுறம் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது.
கீரிசம்பா நெல்லின் விலை 120 ரூவாகக் குறைவடைந்துள்ளது. கொழும்பில் பொன்னி சம்பா 275 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அரசாங்கம் 260 ரூபாவையே கட்டுப்பாட்டு விலையாக நிர்ணயித்துள்ளது. எனினும் நுகர்வோருக்கு அந்த விலையில் அரிசியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகிறது.
ஆனால் நாட்டரிசிக்கான நெல் விவசாயிகளிடமிருந்து 80 ரூபாவுக்கே கொள்வனவு செய்யப்படுகிறது. பெரும்போகத்தில் 30 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் அறுவடை செய்யப்படும். இதன் மூலம் 20 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி கிடைக்கும். வருடத்துக்கான அரிசியின் தேவை 24 இலட்சம் மெட்ரிக் தொன் மாத்திரமேயாகும்.
எவ்வாறிருப்பினும் தற்போது மக்களுக்கு அரிசியைப் பெறுவதற்கு கூட பணம் இல்லை என்பதால் 24 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி கொள்வனவு செய்யப்படும் என்று நாம் நினைக்கவில்லை. எனவே அவற்றைக் களஞ்சியப்படுத்துவதற்கு பாரிய வர்த்தகர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
சதொச மற்றும் மாவட்ட செயலங்கள் ஊடாக அரிசியை விற்பனை செய்வதற்கு முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதால், விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு தம்மிடம் பணம் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாரிய வர்த்தகர்கள் குறைந்த விலையில் நெல்லைக் கொள்வனவு செய்து, கூடிய விலையில் அரிசியை விற்பனை செய்வார்கள். இவ்வாறு விவசாயிகளை நெருக்கடிக்கு உட்படுத்தாமல், மாற்று திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM