(ஆர்.ராம், மின்ஹாஜ்)

சபையில் இருந்து வெளியேற பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மறுத்துள்ள நிலையில், சபாநாயகர் அவரை உடனடியாக வெளியேற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, படைக்கள சேவையர்களும் பொலிஸாரும் சபையில் அவரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆனால், கூட்டு எதிர்கட்சியினர், அவரை அணுகவிடாது சுற்றிநின்று கோஷங்களை எழுப்புகின்றனர்.

3 ஆவது தடவையாக பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடிய நிலையில், வாக்கெடுப்பு ஊடாக தினேஷ் குணவர்தனவை வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.