மன்னார் நானாட்டான் பகுதியில் பஸ் நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் இன்று புதன்கிழமை (31) நண்பகல் 12 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் இளம் தாய் ஒருவர் காயமடைந்து நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் காயமடைந்த இளம் தாய் நானாட்டான் அச்சங்குளம் கிராமத்தை பிறப்பிடமாகவும் அரிப்பு துறையில் வசிப்பவர் என்று தெரிய வருகிறது.
அரிப்புத்துறை பகுதியிலிருந்து வங்காலை நோக்கி ஆண் ஒருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் நாட்டான் பஸ் தரிப்பிடத்தில் இருந்து அரிப்பு துறை நோக்கி குழந்தை ஒன்றுடன் குறித்த இளம் தாய் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்தில் தாய் காயங்களுக்கு உள்ளாகிய போதும் குழந்தை காயம் எதுவுமின்றி தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளார்.
காயமடைந்த தாய் மற்றும் மகள் இருவரும் அருகில் உள்ள நானாட்டான் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM