(நெவில் அன்தனி)
கத்தாரில் நடைபெற்றுவரும் 18ஆவது ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தின் கடைசி இரண்டு முன்னோடி கால் இறுதிப் போட்டிகள் இன்று புதன்கிழமை (31) மாலை நடைபெறவுள்ளன.
நான்கு தடவைகள் சம்பியனான ஜப்பானை, 7ஆவது முன்னோடி கால் இறுதிப் போட்டியில் பஹ்ரெய்ன் எதிர்த்தாடவுள்ளது.
இப்போட்டி தோஹா, அல் துமாமா விளையாட்டரங்கில் பிற்பகல் 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அதனைத் தொடர்ந்து தோஹா அப்துல்லா பின் கலிபா விளையாட்டரங்கில் இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள கடைசி முன்னோடி கால் இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியன் ஈரானை சிரியா சந்திக்கவுள்ளது.
நடந்து முடிந்த முன்னோடி கால் இறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா, தஜிகிஸ்தான், ஜோர்தான், வரவேற்பு நாடும் நடப்பு சம்பியனுமான கத்தார், உஸ்பெகிஸ்தான், தென் கொரியா ஆகிய 6 நாடுகள் கால் இறுதிப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
முன்னோடி கால் இறுதிப் போட்டிகளில் தென் கொரியாவும் தஜிகிஸ்தானும் எதிரணிகளிடம் கடும் சவால்களை எதிர்கொண்டு பெனல்டி முறையில் வெற்றிபெற்றன.
முன்னோடி கால் இறுதி முடிவுகள்
அல் ரயான் எஜுகேஷன் சிட்டி விளையாட்டரங்கில் நேற்று திங்கட்கிழமை (30) மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்திய தென் கொரியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான போட்டியில் தென் கொரியா - 2 என்ற பெனல்டிகள் முறையில் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டி உபாதையீடு நேரத்தைத் தொட்டபோது சவூதி அரேபியா 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியின் வாயிலில் இருந்தது. ஆனால், உபாதையீடு நேரத்தின் 9ஆவது நிமிடத்தில் (99 நி.) தென் கொரியா கோல் நிலையை சமப்படுத்தியது.
இதனை அடுத்து மேலதிக நேரம் வழங்க்பபட்டது. மேலதிக நேர முடிவில் ஆட்டம் 1 - 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இதனை அடுத்து அமுல்படுத்தப்பட்ட பெனல்டி முறையில் 4 - 2 பெனல்டி முறையில் வெற்றிபெற்றது.
தென் கொரிய கோல்காப்பாளர் ஜோ ஹியோன் வூ 2 பெனல்டிகளை அலாதியாகத் தடுத்து தென் கோரியாவை வெற்றிபெறச் செய்தார்.
தஜிகிஸ்தான் வெற்றி
அல் ரயான் அஹமத் பின் அலி விளையாட்டரங்கில் நடைபெற்ற தஜிகிஸ்தானுக்கும் ஐக்கிய அரபு இராச்சித்துக்கும் இடையிலான போட்டி மேலதிக நேர நிறைவில் 1 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இதனை அடுத்து அமுல்படுத்தப்பட்ட பெனல்டி முறையில் 5 - 3 என்ற பெனல்டி முறையில் தஜிகிஸ்தான் வெற்றிபெற்றது.
தோஹா ஜசிம் பின் ஹமாத் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது முன்னோடி கால் இறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவை 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றிகொண்டது.
ஜோர்தானுக்கும் ஈராக்குக்கும் இடையில் கலிபா சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகவும் இறுக்கமான முன்னோடி கால் இறுதிப் போட்டியில் 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஜோர்தான் வெற்றிபெற்றது.
அல் கோர் அல் பய்த் விளையாட்டரங்கில் பலஸ்தீனத்திடம் கடும் சவாலை எதிர்கொண்ட வரவேற்பு நாடான கத்தார் 2 - 1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.
தாய்லாந்துக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையில் அல் வக்ரா அல் ஜநூப் விளையாட்டரங்கில் மிகவும் இறுக்கமாக நடைபெற்ற போட்டியில் உஸ்பெகிஸ்தான் 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM