நாம் வெளிநாட்டிலிருந்து மீனை இறக்குமதி செய்கிறோம் ; டொலரை ஈட்டுகின்ற வளங்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகின்றன - ரில்வின் சில்வா

Published By: Digital Desk 3

31 Jan, 2024 | 11:48 AM
image

தற்போது மீன்பிடிக் கைத்தொழில், விவசாயம் உள்ளிட்ட அனைத்துக் கைத்தொழில்களும் தொழில்முயற்சிகளும் போன்றே நாட்டின் பொருளாதாரமும் முழுமையாகவே சீரழிக்கப்பட்டுள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கழுத்துறை மாவட்ட மீனவர் மாநாடும் அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனமும் அண்மையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த பேருவளை நகரம் இரத்தினக்கல் கைத்தொழிலைப்போன்றே சுற்றுலாக் கைத்தொழிலுக்கும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அவையனைத்தும் தற்போது சீரழிக்கப்பட்டுள்ளன.

எமது ஒட்டுமொத்த பொருளாதாரமுமே சீரழிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டிலேயே வசிக்கிறோம். மத்திய வங்கி பிரதானிகன் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள் "எமது நாடு வங்குரோத்து" நாங்கள் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாது.

இந்த ஆட்சியாளர்கள் பெப்ரவரி 04 ஆந் திகதி 76 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறார்கள். அத்தினத்தன்று கடலுக்கு துப்பாக்கிப் பிரயோகம்செய்து, களியாட்டங்களை நடாத்தி, ஜனாதிபதி, பிரதமர் நாட்டின் அபிவிருத்தி பற்றி, சுதந்திரத்தினால் எமக்கு கிடைத்தவை பற்றி, எதிர்காலத்தை நாட்டை உருப்படியாக்குவது எப்படியென தம்பட்டம் அடிப்பார்கள். இதுவரை காலமும் சுதந்திர தின வைபவங்களில் நாட்டை உருப்படியாக்குகின்ற விதம் பற்றியே பேசினார்கள். எவ்வாறு உருப்படியாக்கினோம் என்பது பற்றிப் பேசவில்லை.

எனினும் 76  வருடங்கள் கழிந்தவிடத்து மீனவனால் அந்த கைத்தொழிலில் வாழமுடியாதநிலை  ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களால் ஏதெனுமொரு உற்பத்தி வழிமுறையால் வாழமுடியாதநிலை  ஏற்படுத்தப்பட்டுள்ளது. கழுத்துறை மாவட்டத்தில் தேயிலை, இறப்பர் கைத்தொழில்கள் சீரழிந்துவிட்டன. இந்த சீரழிவு தற்செயலாக ஏற்பட்டதொன்றல்ல.  

குறிப்பாக கடந்த 45 வருட காலத்தினால் எமது நாட்டின் அனைத்து உற்பத்திகளும் சீரழிக்கப்பட்டுள்ளன. எமது ஆட்டசியாளர்கள் கடன் பெற்றார்கள், திருடித் தின்றார்கள், உற்பத்தி வழிமுறைகளை விருத்திசெய்யவில்லை. வாங்கிய கடனைச் செலுத்தமுடியாமல் நாங்கள் வங்குரோத்து அடைந்துள்ளோம். எம்மிடம் வெளிநாட்டு ஒதுக்கங்கள் கிடையாது. எமக்கு எண்ணெய் வரிசைகளில் கேஸ் வரிசைகளில் காத்திருக்க நேரிட்டது. எமக்கு அவற்றுக்காக செலுத்த டொலர் இன்மையாகும். நாங்கள் டொலரைப் பிறப்பிக்கவில்லை. இருந்த டொலரைக் கொண்டுதான் எமக்கு அவசியமானவற்றைக் கொண்டுவரவும் கடனைச் செலுத்தவும் நேரிட்டது. இந்த இரண்டையும் புரிய முடியாதென்பதால் இரண்டு வருடங்களாக நாங்கள் கடன் செலுத்துவதில்லை. அதனால் இருந்த டொலர்களைக்கொண்டு சிறிது பொருட்களைக் கொண்டுவர இயலுமை கிடைத்தது.  நாங்கள் இருப்பது வெளிநாட்டுச் சொத்துக்கள் இல்லாத ஒரு நாட்டிலாகும். எமக்கு வெளிநாட்டுச் சொத்துக்களை ஈட்டக்கூடிய பெருமளவிலான வளங்கள் இருந்தபோதிலும் அவை பயன்படுத்தப்படாமல் விரயமாகி வருகின்றன. ஒரு நாடு இப்படிப்பட்ட நிலைமைக்கு ஆளாகவேண்டுமா?

மீன்பிடித்தொழில் பற்றி அறிந்த, திறமையான மீனவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு விளைச்சலைப் பெறுவதற்கான வாய்ப்பு வசதிகளை அரசாங்கம் பெற்றுக்கொடுத்தால் டொலர்களை உழைக்க முடியும். உலகில் கடல் இருக்கின்ற ஒவ்வொரு நாட்டினதும் மிகப்பெரிய கைத்தொழில் மீன்பிடித் தொழிலாகும்.

ஜப்பான், தென்கொரியா, சீனா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் மீன்பிடி ஒரு பாரிய கைத்தொழிலாகும். நாட்டைச் சூழவுள்ள கடலில் எம்மால் பல கைத்தொழில்களை புரியமுடியும். மீன்பிடிக் கைத்தொழில், சுற்றுலாக் கைத்தொழில், காற்றுவிசை மின்சாரத்தைப் பிறப்பிக்கமுடியும். அவற்றைப் புரிவதில் அரசாங்கங்கள் வெற்றியடையவில்லை. எம்மால் வருமானம் பெறக்கூடிய துறைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. விவசாயத்திற்குப் பொருத்தமான மண், காலநிலை உள்ளது. எனினும் கமக்காரனுக்கு தேவையான ஒத்துழைப்பினை அரசாங்கம் கொடுக்காமையால்  விவசாயம் சீரழிந்து விட்டது. 

நாட்டை வங்குரோத்து அடையச்செய்வித்த ஐயாமார்கள் மீண்டும் அவர்களால் நாட்டைச் சீரமைக்க முடியுமெனக் கூறுகிறார்கள். வங்குரோத்து அடையச் செய்வித்தவர்களால் மீண்டும் உருப்படியாக்கிட முடியாது. அதுதான் உண்மை. உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்கவில்லை. கடன்வாங்கித் தின்கின்ற பொருளாதாரத்தை உருவாக்கினார்கள். அதன் பெறுபேறுகளை நாங்கள் அனுபவித்து வருகிறோம். தொழில்முயற்சிகள் சீரழிந்து வங்கிகளுக்கு சொந்தமாகி விடுகின்றன. ஒருசிலர் விற்றுத்தீர்த்துப் போகிறார்கள். அழிவடைந்த நாட்டில் மக்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் நெருக்கடியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த நெருக்கடிக்குள்ளேயே நல்லதொரு விடயம் மேலோங்கி வருகின்றது. இந்த பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் வரலாற்று அனுபவங்கள் மூலமாக ஒரு முடிவினை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 76 வருடகாலமாக பேணிவந்த தவறான பொருளாதாரத்தையும் தவறான அரசியலையும் அதற்கு தலைமைவகித்த அனைத்து ஆட்சிக்குழுக்களையும் விரட்டியடித்து மக்களின் அரசாங்கமொன்றை அமைக்கத் தயாராகி இருக்கிறார்கள். "ஒவ்வொரு கறுப்பு மேகத்திலும் வெள்ளிக் கோடு இருப்பதுபோல்" திசைகாட்டியை  சூழத் தயார் எனும் செய்தியை அனைத்துச் சக்திகளும்  சுட்டிக்காட்டி வருகின்றன. 

நாங்கள் உங்கள் அனைவரையும் சேர்த்தக்கொண்டிருப்பது  வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் செல்வதற்காக அல்ல. நாங்கள் இந்த நாட்டின் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். எமது நாட்டின் உற்பத்திக்கு பங்களிப்புச் செய்கின்ற சக்திகள் அனைத்தையும் ஒன்றுதிரட்ட வேண்டும். நாங்கள் அமைக்கின்ற புதிய அரசாங்கத்தில் பெருங்கடலை வெற்றிகொள்ள மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர் சமுதாயத்தை ஒன்றுதிரட்ட வேண்டும். எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு மீன்பிடித்தொழிலில் இருந்து பெரும்பங்கினைச் சேர்ப்பதற்கான திடசங்கற்பத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே இந்த மாநாடு நடாத்தப்படுகின்றது.

நாங்கள் கேட்கின்றவற்றைக் கொடுக்கவும் அதற்கு செவிசாய்த்திடவும் இந்த அரசாங்கம் தயாரில்லை. பேசவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ இடமளிப்பதில்லை. நாங்கள் என்ன செய்வது? அதற்காக எமது நாட்டின் அனைத்துச் சக்திகளையும், மீனவர், கமக்காரர், உழைக்கும் மக்கள், தொழில்முனைவோர் அனைவரும் எமது பணிகளை மேற்கொள்ளக்கூடிய, எமது வியர்வைக்கும் முயற்சிக்கும் பெறுமதி கிடைக்கின்ற, எமது பணிகளால் நாட்டுக்கு எதையாவது சேர்க்கக்கூடிய புதிய  நாட்டை உருவாக்கிட வேண்டும். புதிய உற்பத்திப் பொருளாதாரமொன்றை உருவாக்கிட வேண்டும். நாங்கள் புதிய அரசாங்கமொன்றை அமைத்திட வேண்டும். இந்நாட்களில் மேற்கொண்ட அனைத்து மதிப்பாய்வு அறிக்கைகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னணியில் இருக்கின்றது. பெரும்பான்மை மக்களின் தெரிவு மாத்திரமல்ல. உளவுப் பிரிவு அறிக்கைகளிலும் கூட நாங்கள் முன்னணியில் இருக்கின்றமையே வெளிப்பட்டுள்ளது. இப்போது நாட்டை ஆட்சிசெய்கின்ற ஐயாமார்கள் பயந்துபோயுள்ளார்கள். அவர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய சவாலாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளமையே அதற்கான காரணமாகும். தற்போது அவர்கள் பேசுவது எமது கொள்கைகளைப் பற்றியல்ல. சேறு பூசுதல்களும் அவதூறாக பேசுவதுமாகும். நாங்கள் ஒரு சக்தி என்றவகையில் எவ்வளவு பலம்பொருந்தியவர்கள் என்பதே அதன்மூலமாக புலப்படுகின்றது.

இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம்சென்று எம்மீது வரி விதிக்கிறார்கள். அவர்கள் எந்தவிதமான அர்ப்பணிப்பையும் செய்யாமல் எம்மை அர்ப்பணிப்புச் செய்யுமாறு கோருகிறார்கள். உழைக்கும்போதே செலுத்துகின்ற வரியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவர்கள் நாட்டை விட்டுச் சென்றார்கள். வரவுசெலவுக்கு முன்னராக பாராளுமன்ற பிரேரணை நிறைவேற்றம் மூலமாக வற் வரியை அதிகரித்தார்கள். 15% இல் இருந்ததை 18% வரை அதிகரித்தார்கள்.  வற் வரிக்கு ஏற்புடையதாக இருந்திராத 94 பண்டங்களுக்கு வற் வரி விதித்தார்கள். அந்த பண்டங்கள் மத்தியில்  பாடசாலை உபகரணங்கள், எண்ணெய், பசளை, விவசாய உபகரணங்கள் பொதுவான வாழ்க்கைக்கு அத்தியாவசியமான அனைத்துப் பண்டங்களுக்கும் வற் வரி விதிக்கப்பட்டுள்ளது. முன்னர் வருமானம் பெறுகின்றவர்களிடமிருந்து வரி அறவிடப்பட்டது. தற்போது எந்தவிதமான வருமானம் இல்லாதவர்களும் வரி செலுத்தவேண்டி ஏற்பட்டுள்ளது. அனைவரும் வரி செலுத்துவதற்கான டின் இலக்கமொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  வேறு நாடுகளில் வரி அறவிட்டு கல்விக்காக, சுகாதாரத்திற்காக, நலனோம்பலுக்காக வசதிகள் வழங்கப்படுகின்றன. எமது நாட்டில் வரி அறவிடுகிறார்கள்: கல்விக்கு சுகாதாரத்திற்கான செலவுகளைக் குறைக்கிறார்கள்.

எங்கள் தாய் தந்தையருக்கு பணம் கிடையாதென்பதால் பிள்ளைக்கு கல்வி புகட்ட முடியாத நிலையேற்படுகின்றது. நோய்க்கு மருந்து வாங்க வழியில்லை. ரணில் விக்கிரமசிங்க செலவுத் தலைப்பு மூலமாக வரவுசெலவில் இருந்து பணத்தை ஒதுக்கிக்கொண்டு ஒருமாதம்தான் ஆகிறது. மீண்டும் வெளிநாட்டு விஜயங்களுக்கும் வாகனப் பராமரிப்பிற்கும் குறைநிரப்பு மதிப்பீடுமூலமாக பணத்தைக் கோருகிறார். சனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டு ஒருவருடத்தில் பதினான்கு தடவைகள் வெளிநாடு சென்றுள்ளார். அவர் ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு சுகபோகம் அனுபவிக்கிறார். உங்கள்மீதும் எம்மீதும் வரிவிதித்து பெறுகின்ற பணத்தையே இவ்வாறு செலவு செய்கிறார்கள். 

உற்பத்தி வழிமுறைகளை வீழ்ச்சியடைச்செய்து, வருமான வழிவகைகளை இல்லாதொழித்து, எம்மீது வரிவிதித்து, கழுத்தை நெரித்து சுரண்டி கொள்ளைக்கார கும்பலொன்று சுகமாகவும் சந்தோசமாகவும் வாழ்கிறது. எங்கள் முன்னிலையிலும் உங்கள் முன்னிலையிலும்  பாரிய பொறுப்பு இருக்கின்றது. வீழ்த்திய மீன்பிடித் தொழிலை, இரத்தினக்கல் தொழிலை, விவசாயத்தை, தேயிலைத் தொழில்த்துறையை மீட்டெடுத்திட வேண்டும். அதற்கு உதவுவதற்காக, பிரமாண்டமான உற்பத்திப் பொருளாதாரத்திற்கு கைகொடுத்து உதவுகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.  அதற்கான கொள்கைகளைக்கொண்ட,  ஆற்றல் படைத்த அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த அரசாங்கம் எமது  அபிமானத்தை வீழ்த்தியுள்ளது. உலகில் எந்தவொரு நாடும் எமக்கு வீசா வழங்குவதில்லை. எமது நாட்டில் நிதிக் கொள்கையைத் தீர்மானிப்பது சர்வதேச நாணய நிதியமாகும்.     பொருளாதாரப் பலத்தையும் பொருளாதார சுதந்திரத்தையும் நாங்கள் இழந்துள்ளோம். உற்பத்திப் பொருளாதாரமொன்றையும் உறுதியான பொருளாதாரமொன்றையும் நாங்கள் உருவாக்கிட வேண்டும். உற்பத்திப் பொருளாதாரத்தையும் அந்த உற்பத்தி அனைவருக்கும் நியாயமானவகையில் பகிரப்படுகின்ற பொருளாதாரத்தையும் உருவாக்கிட வேண்டும். எமது நாடு கலாசாரரீதியாக நாசமாக்கப்பட்டுள்ளது. ஊழலும் மோசடியும் தாண்டவமாடுகின்றன. சட்டத்தின் ஆட்சி கிடையாது. பாதாள உலகக் கோஷ்டியும் பொலீஸின் ஒருசில உத்தியோகத்தர்களும் கொலை செய்கிறார்கள். சீருடைதரித்து கௌரவமாக தொழில்புரிய பொலீஸாருக்கு இடமளிக்கவில்லை. பொலீஸாரை அரசியலுக்கு கட்டுப்படுத்தினார்கள்.  அதனால் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படல் வேண்டும்.

ஒத்துணர்வுகொண்ட, சகோதரத்துவத்துடன் சீவிக்கின்ற மக்களை உருவாக்க வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லீம் இனங்களுக்கிடையில் தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும். நாட்டை நேசிக்கின்ற அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும். நாட்டை மீட்டெடுத்தால் தொழில்முயற்சிகள் பலமடையும். விவசாயம் விருத்தியடையும். எமது கைக்கு காசு வரும். எம்மால் சிறந்த வாழ்க்கையைக் கழிக்க முடியும். சேர்கின்ற வரித் தொகை அதிகரிக்கும். தற்போது மக்களின் கொள்வனவுகள் குறைந்துவிட்டன. பொருளாதாரம் சுருங்கினால் அரசாங்கம் எதிர்பார்க்கின்ற வரி சேரமாட்டாது. பலம்பொருந்திய பொருளாதாரத்தை அமைத்தால் சமூகம் சிறந்ததாக அமையும்.  கல்விக்கு பிரச்சினை ஏற்பட மாட்டாது. பலம்பொருந்திய பொருளாதாரத்தை அமைத்தால் அதன் நன்மைகள் மக்களுக்கு கிடைக்கும்.  பணத்தை பகிர்ந்தளிப்பது பற்றியா? இல்லை. சீனக் கூற்று ஒன்று இருக்கின்றது "நான் உங்களுக்கு ஒரு மீனைக் கொடுத்தால் உங்களின் ஒருவேளை பசியைப் போக்கலாம். நான் உங்களுக்கு மீன்பிடிக்கின்ற வழிமுறையைக் கற்றுக்கொடுத்தால் உங்கள் பசியை சதாகாலமும் போக்கலாம்." நாங்கள் செய்யவேண்டியது மக்களுக்கு மூன்றுவேளை உண்ணக்கூடிய பொருளாதாரமொன்றை அமைத்துக்கொடுக்க வேண்டும். எமக்குத்தேவை பிறரில் தங்கிவாழும்  மக்களல்ல.  தமது முயற்சியால் எழுந்து நிற்கையில் அதற்கு கைகொடுத்து உதவுகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.

நன்மைகளை நியாயமாக பகிர்ந்தளிக்கின்ற பலம்பொருந்திய பொருளாதாரமொன்றை நாங்கள் உருவாக்கிட வேண்டும். எவ்வாறு நன்மைகளைப் பகிர்வது. நன்மைகள் அதிகரிப்பதன் மூலமாக கல்விக்காக ஒதுக்குகின்ற பணத்தின் அளவு அதிகரிக்கும். நீங்கள் பிள்ளைகளின் கல்விக்காக  பணம் செலவிட வேண்டியதில்லை.  பாடசாலைக் கல்வி சிறப்பாக ஈடேறுமாயின்  ரியுஷன் அனுப்பத் தேவையில்லை. அருகிலுள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக மாற்றினால், அனைத்து வசதிகளையும் கொண்டதாக அமைத்தால் எமது பிள்ளை ஊரிலுள்ள பாடசாலைக்குச் செல்லும். செலவு குறையும். பாதுகாப்பு சம்பந்தமான சிக்கல் கிடையாது. பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் சுதந்திரம் கிடைக்கும். சுகாதார சேவைக்கு அதிகமான பணத்தை ஒதுக்கினால்  எமக்கு மருந்து இலவசமாக கிடைக்கும்.  பரிசோதனை வசதிகள் அமைக்கப்படும். அதுதான் தேசிய மக்கள் சக்தியின் கொள்கை. தற்போது மக்களை நோயாளிகளாக மாறஇடமளித்து நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது ஒரு தீத்தொழிலாக மாறிவிட்டது. நாங்கள் வீழ்த்திய நாட்டை மீட்டெடுத்திட வேண்டும்.  எமக்கு இருக்கின்ற மிகப்பெரிய செல்வம் கடலாகும். அதில் கைவைக்கவில்லை. எமரது நாட்டுக்கு மீன்பிடிக்கின்ற ட்ரோலர் கலமொன்று,  கப்பலொன்று கிடையாது. மீன்பிடிக் கைத்தொழிலை நாட்டுக்கு வருமானம் கொண்டுவருகின்ற கைத்தொழிலாக மாற்றிடவேண்டும். பலம்பொருந்திய பொருளாதாரத்தை உருவாக்குகின்ற மக்களின் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள வேண்டும்.  தேசிய மலர்ச்சியை  ஏற்படுத்துகின்ற அரசாங்கமொன்றை அமைத்திட வேண்டும். நாமனைவரும் தெரிவுசெய்ய வேண்டிய ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. அதனால் வங்குரோத்து அடைந்த அரசியலை ஒருபுறம் வைத்துவிட்டு எமது வலிமைகள் மீது, எமது வளங்கள் மீது நம்பிக்கை வைப்போம்.   தேசிய ஒற்றுமையை உருவாக்கிடுவோம். புதிய நாட்டை, புதிய சமூகத்தை,  அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய சமூகமென்றை அமைத்திடுவோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகள்...

2024-05-30 02:40:48
news-image

யாழில் மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி...

2024-05-30 02:36:34
news-image

மாகாண சுகாதாரத்துறை நிர்வாகம் இறுக்கமாக செயற்பட...

2024-05-30 02:31:15
news-image

யாழ் பொது நூலகத்தின் கதையின் ஏரியும்...

2024-05-30 01:49:12
news-image

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும்...

2024-05-30 01:21:30
news-image

தேர்தலை பிற்போடவேண்டுமென்பது ஐக்கிய தேசிய கட்சியின்...

2024-05-29 16:28:15
news-image

ஜனாதிபதி தேர்தலை பிற்போட நாட்டு மக்கள்...

2024-05-29 16:26:18
news-image

முச்சக்கரவண்டியுடன் பஸ் மோதி விபத்து; 03...

2024-05-29 20:36:22
news-image

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை...

2024-05-29 20:12:26
news-image

இந்நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் மாற்றத்திற்காக...

2024-05-29 20:06:26
news-image

தோல்வியை மறைக்கவே தேர்தலை பிற்போடத் திட்டம்...

2024-05-29 16:21:18
news-image

அடுத்தடுத்து 4 பேர் பலியாகிய சோகம்;...

2024-05-29 19:48:51