19 வயதின் கீழ் உலகக் கிண்ண சுப்பர் 6 சுற்றில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா

30 Jan, 2024 | 10:12 PM
image

(நெவில் அன்தனி)

புளூம்பொன்டெய்ன் மங்குவாங் ஓவல் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் 6 சுற்றின் முதலாம் குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்தை 214 ஓட்டங்களால் இந்தியா மிக இலகுவாக வெற்றிகொண்டது.

முஷீர் கான் குவித்த அபார சதம் உட்பட அவரது சகலதுறை ஆட்டம், ராஜ் லிம்பினி, சௌமி பாண்டே ஆகியோரது துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கின.

இந்த வெற்றியுடன் அரை இறுதியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை இந்தியா அதிகரித்துக்கொண்டுள்ளது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 295 ஓட்டங்களைக் குவித்தது.

மொத்த எண்ணிக்கை 28 ஓட்டங்களாக இருந்தபோது இந்தியாவின் முதலாவது விக்கெட் சரிந்தது.

ஆனால், அதன் பின்னர் முஷீர் கான் 2ஆவது விக்கெட்டில் ஆதர்ஷ் சிங்குடன் 77 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் உதய் சஹாரனுடன் 87 ஓட்டங்களையும் பகிர்ந்து இந்தியாவை பலமான நிலையில் இட்டார்.

ஆரம்ப வீரர் ஆதர்ஷ் சிங் 52 ஓட்டங்களையும் உதய் சஹாரன் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய முஷீர் கான் 126 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 131 ஓட்டங்களைக் குவித்தார்.

பந்துவீச்சில் மேசன் க்ளார்க் 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

296 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 28.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 81 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது.

அணித் தலைவர் ஒஸ்கர் ஜெக்சன் (19), ஸக் கமிங் (16), அலெக்ஸ் தொம்சன் (12), ஜேம்ஸ் நெல்சன் (10) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சௌமி பாண்டே 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ராஜ் லிம்பானி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் முஷீர் கான் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

 இந்தியா தனது அடுத்த சுப்பர் 6 போட்டியில் நேபாளத்தை எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி எதிர்த்தாடும்.  

ஆட்ட நாயகன்: 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யும் இலங்கை...

2025-02-18 12:14:50
news-image

ஆகிய கனிஷ்ட குறிபார்த்து சுடுதலில் இலங்கைக்கு...

2025-02-17 18:05:27
news-image

லாகூர் கோட்டையில் பச்சை மின் விளக்குகளுடன்...

2025-02-17 18:02:20
news-image

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வட ...

2025-02-17 15:23:07
news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16