கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு போராட்டம் !

Published By: Vishnu

30 Jan, 2024 | 08:36 PM
image

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை (30)  பகல் கொழும்பு விகாரமாதேவி பூங்கா சுற்றுவட்டத்தில் இடம்பெற்றது.

போராட்டத்தை கலைப்பதற்கு போராட்டகாரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை வீச்சு மேற்கொள்ளப்பட்டது.

''மாற்றத்தை ஏற்படுத்தும் வருடம் - 2024'' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் கொழும்பில் முன்னெடுத்த எதிர்ப்புப் பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். 

வெட் வரி உள்ளிட்ட மக்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குரிய தீர்வை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கட்சியின் ஆதரவாளர்கள் கொழும்பிற்கு வருகை தந்திருந்தனர். 

கொழும்பு விகாரமகாதேவி பூங்கா அருகில் இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த பேரணி ஆரம்பமாகி முதல் 15 நிமிடங்களுக்குள்ளால் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகையும்,நீர்த்தாரைப் பிரயோகமும் இடம்பெற்றது.

மீண்டும் பேரணியில் கலந்துகொண்ட ஆதரவாளர்களுடனும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதமும் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா பிரதான நுழைவாயில் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச பேரணி உரையை நிகழ்த்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருக்கு மூன்று நீதவான் நீதிமன்றங்களினால் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. 

கொழும்பின் சில வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட தடை விதித்து,இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருக்கு கொழும்பு இலக்கம் 04 நீதவானால் இன்று முற்பகல் தடையுத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே,மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆகியனவும் தடை உத்தரவு பிறப்பித்திருந்தன.  

வீதி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாமெனவும் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றுக்குள் உட்பிரவேசிப்பதைத் தவிர்க்குமாறும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதமேற்படுத்த வேண்டாமெனவும் நீதிமன்ற உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இதேவேளை,எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச் செயலாளருமான முஜிபுர் ரஹ்மான் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை,நீர்த்தாரை பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரணியை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரதேசமதாச கொழும்பு தேசிய வைத்தியாசலைக்கு சென்று பாதிக்கப்பட்ட கட்சி ஆதரவாளர்களின் நலன் விசாரித்தார்.

(படப்பிடிப்பு –ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58