எம்மில் பலரும் சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு. தடித்த வார்த்தைகளைப் பாவிப்பதுண்டு. வேறு சிலர் அந்த நேரத்தில் கையில் கிடைக்கும் பொருட்களால் வன்முறையில் ஈடுபடுவதுமுண்டு. இதன் காரணமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து. விசாரணை நடைபெற்று. விளக்கமறியல் வரை நீடிக்கும். பின் நீதிமன்றங்களுக்கு சென்று வழக்கை எதிர்கொள்ளக்கூடிய சூழலும் ஏற்படும்.
பின்னர் தனிமையில் இருக்கும் போது சிந்தித்தால் அந்த கோபமான தருணத்தில் நடந்த நிகழ்வுகளும்.. உங்களின் சுயக்கட்டுபாட்டை மீறி நீங்கள் செய்த செயலும்.. தவறு எனத் தோன்றும். இருப்பினும் சம்பவங்களும், சந்தர்ப்ப சாட்சியங்களும் உங்களுக்கு எதிராக இருப்பதால், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும். இது போன்ற தருணங்களில் இதிலிருந்து விரைவில் மீள வேண்டும் என நினைப்பீர்கள்.
ஆனால் சூழலும், எதிரிகளும் ஒன்றிணைந்திருப்பதால் உங்களுடைய எண்ணம் ஈடேறாது. இது போன்ற சமயங்களில் எம்முடைய முன்னோர்கள் சில பரிகாரங்களை மேற்கொண்டால், இதிலிருந்து முழுமையான நிவாரணத்தை பெறலாம் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.
இத்தகைய தருணங்களில் செவ்வாயும், சனியும் இணைந்திருக்கும் ஆலயங்களில் அதாவது உங்களுடைய இல்லத்திற்கு அருகே இருக்கும் முருகன் ஆலயங்களில் சனி பகவான் தனி சன்னதியுடன் வீற்றிருந்து அருள்பாலித்தால்.., அந்த ஆலயங்களுக்கு சென்று முருகபெருமானனையும், சனிப்பகவானையும் மனதார பிரார்த்திக்கவேண்டும்.
பலிபூஜை நடைபெறும் உக்கிர தெய்வங்களின் ஆலயங்களுக்கு சென்று பலி பூஜை நடத்தி பிராத்திக்கலாம். உதாரணமாக பாண்டி முனீஸ்வரர் ஆலயம் அருகே இருந்தால்.. அங்கே சென்று பூசாரியிடம் சொல்லி பலி பூஜையை நடத்தி, பிரார்த்திக்கலாம்.
அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு இரும்பாலான வேல் எனும் ஆயுதத்தை செய்து அதனை சமர்ப்பித்து பிரார்த்திக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் விரும்பும் வாழ்வாதார உபகரணங்களை தானமாக வழங்கி அவர்களை மகிழ்வித்தாலும் உங்களது பிரார்த்தனை பலிக்கும்.
பாலின சிறுபான்மையினராக இருக்கும் திருநங்கைகளுக்கு சிவப்பு வண்ணத்திலாஆன ஆடைகளை தானமாக வழங்கினாலும் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பு உருவாகும்.
இந்த பரிகாரங்களில் எல்லாம் நீங்கள் நினைத்தபடி வழக்குகளிலிருந்து வெற்றி காணவில்லை என்றால்.. அருகிலிருக்கும் சிவாலயத்திற்கு கோதானம் எனும் பசுவை தானமாக வழங்கினால் எம்மாதிரியான கடினமான வழக்குகளாக இருந்தாலும்.. சாதகமான பலன்களை பெற முடியும்.
ஆனால் மேற்கூறிய பரிகாரங்களை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் செய்த தவறை உணர்ந்து, மனதால் மன்னிப்பு கேட்கும் மனநிலையில் இருக்கவேண்டும். அப்போது தான் பரிகாரங்கள் பலனளிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
தொகுப்பு சுபயோகதாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM