(எம்.ஆர்.எம்.வசீம்)
நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச்ட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தது. அந்த திருத்தங்கள் அனைத்தும் அன்று சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்போது உள்வாங்கப்பட்டிருந்தன என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறேன்.
மேலும் பாராளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படும்போது, இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்ததுடன், பாராளுமன்ற ச நடவடிக்கைகள் இடம்பெறும்போது அதனை அவதானிக்க அரச அதிகாரிகள் அமந்திருக்கும் அறைக்கு வந்து அங்கிருந்த சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடன் இது தொடர்பாக கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டே சென்றார். உயர் நீதிமன்றத்தின் திருத்தங்களை சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளபதாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு உயர்நீதிமன்றம் முன்வைத்திருந்த திருத்தங்கள் அனைத்தும் முறையாக இடம்பெற்றுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைபு திணைக்களம் என்பன அதனை உறுதிப்படுத்தியுள்ளன.
அதேநேரம் உயர் நீதிமன்றத்தின் திருத்தங்கள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் ஆளும் கட்சி கூட்டத்துக்கு சென்று உறுதிப்படுத்தி இருந்தார்.
அவ்வாறான நிலையில் உயர் நீதிமன்றத்தின் திருத்தங்கள் சட்டமூலத்தில் உள்வாங்கப்படாததால், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் கைச்சாத்திட வேண்டாம் என எதிர்க்கட்சிகள் சபாநாயகரை கோரியுள்ளதாக தேசிய பத்திரிகை ஒன்றில் வந்திருக்கும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புரம்பானது. அது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலாகும்.
அத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்தவொரு சட்டத்தையும் சபாநாயகர் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு வாரகாலத்துக்குள் அதனை சான்றுரைப்படுத்துவார். அதன் பிரகாரம் நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கும் சபாநாயகர் அடுதத பாராளுமன்ற அமர்வுக்கு முன்னர் கைச்சாத்திட்டு சான்றுரைப்படுத்துவார். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM