இன்றைய சூழலில் எம்முடைய மக்கள் விரும்பும் ஆறாவது விரல் செல்போன் அல்ல பணம். விரும்பும் ஐந்தாவது வேதம் பணம். விரும்பும் எட்டாவது அதிசயம் பணம்.
பணம் இதை எப்போதும் விரும்புவதால்... பணம் தருகிறார்கள் என யார் சொன்னாலும்... அல்லது எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி? என யாரேனும் ஆலோசனைச் சொன்னால்.. எத்தகைய நெருக்கடியில் இருந்தாலும், அவர் கூறும் வழிமுறைகளையும். விதிகளையும், பயனுள்ள குறிப்புகளையும் கேட்க தயாராகிறோம். ஏனெனில் பணம்.. பஞ்சபூதத்தைக் காட்டிலும் அவசியாகத் தேவைப்படும் ஆறாவது பூதம்.
இதற்காக எம்முடைய முன்னோர்கள் உமக்கு என்னத் தேவையோ.. அதை இந்த பிரபஞ்சத்திடம் கேள். அவை உனக்கு தரத் தயாராகயிருக்கிறது.
உம்முடைய தேவையை நீ தெளிவாக கேட்டால்.. அது கொடுத்தேத் தீரும் என்கிறார்கள். இதனூடாக எம்முடைய முன்னோர்கள் தியானத்தின் வலிமையை உணர்த்தியிருக்கிறார்கள்.
அதாவது நாம் நாளாந்தம் தியானப் பயிற்சியை மேற்கொள்ளும் போது,“எமக்கு வருவாய் அதிகரித்து வருகிறது. நான் கோடிஸ்வரனாகி, பி எம் டபிள்யு சீரிஸ் 7 வெண்மை நிற மகிழுந்நில் குடும்ப உறுப்பினர்களுடன் பயணிப்பேன்” என மனதுக்குள் நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும். இதை பிரபஞ்சத்திடம் கேட்டால் பிரபஞ்சம் உங்களுடைய எண்ணத்தை பூர்த்தி செய்யும்.
அதே தருணத்தில் வாழ்க்கையில், பணத்தை நோக்கி அதை துரத்தி கொண்டு செல்லாதீர்கள். அதை காந்தம் போல் ஈர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.
இதற்கு சிறந்த வழி.. தியானம் தான். இதன் போது முதலில் நீங்கள் மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும். தியானித்தால் ஸ்பிரிச்சுவல் லைஃப் எனப்படும் ஆன்மீக வாழ்வு கிடைக்கும்.
அதே தருணத்தில் பொருளியல் வாழ்விற்கான ஆற்றலும் கிடைக்கும். இதனை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். தியானத்தின் போது உங்களுக்கு என்ன தேவை என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு அதை நீங்கள் பிரபஞ்சத்திடம் கோரிக்கையாக வைக்க வேண்டும். அதே தருணத்தில் அதன் உள்நோக்கம் நேர்நிலையானதாக இருக்க வேண்டும். பின்னர் இறுதியில் அது நடந்து விட்டதாக நினைத்து நன்றியும் சொல்ல வேண்டும்.
இதன் போது உங்களது சுண்டு விரல்.. அதற்கு அடுத்த விரல்.. இரண்டையும் மடக்கி விடவேண்டும். மீதமுள்ள மூன்று விரல்களையும் அதன் நுனி பகுதியை ஒன்றிணைத்து முத்திரை போல் வைத்து கொள்ள வேண்டும்.
இருபது நிமிடங்களுக்கு பிறகு உங்களது பணதேவை குறித்த பிரார்த்தனையை பிரபஞ்சத்திடம் தெரிவித்து விட்டதும் கண்களைத் திறக்காமல் உங்களுடைய கை விரல்கள் ஐந்தையும் ஒன்றிணைத்து பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லும் சங்கல்ப முத்திரையையும் செய்யுங்கள். உங்களுடைய பணம் தொடர்பான உங்களின் தெளிவான கோரிக்கைகளை இந்த பிரபஞ்சம் நிறைவேற்றுவதை அனுபவத்தில் உணரலாம்.
உடனே எம்மில் சிலர் எமக்கு தேவையான அளவிற்கு பணம் இருக்கிறது. ஆனால் அதனை அவசரத் தேவைக்காகவும், அத்தியாவசியத் தேவைக்காகவும் தெரிந்த மற்றும் தெரியாத நபர்களுக்கு கடனாகக் கொடுத்துவிட்டேன். ஆனால் அவை இது வரை வசூலாகவில்லை. இதை வசூலிக்கும் முறையைப் பற்றி சொல்லுங்கள். ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் மனம் புண்படக்கூடாது என்பர். இதற்காகவும் எம்முடைய முன்னோர்கள் பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்.
அதாவது கொடுத்த தொகை திரும்ப வசூலாகவேண்டும் என்றால், காலபைரவர் ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும். எட்டு செவ்வாய் கிழமை தொடர்ந்து நெய் தீபம் ஏற்றி சஹஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி செய்தால்... உங்களுடைய பணம் கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப வருவதை அனுபவத்தில் காணலாம்.
உடனே எம்மில் சிலர் நாங்கள் வைணவர்கள். சிவாலயங்களில் இருக்கும் காலபைரவரை வழிபடுவது என்பது தர்மசங்கடமாக இருக்கிறது என எண்ணினால், பெருமாள ஆலயத்தில் இருக்கும் சக்கரத்தாழ்வரை வணங்கலாம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி 48 நாட்கள் தொடர்ந்து வழிபட வேண்டும். சக்கரத்தாழ்வார் சன்னதியை பன்னிரண்டு முறை வலம் வர வேண்டும். இப்படி செய்தாலும் கூட கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். சிலருக்கு சக்கரத்தாழ்வாருக்கு 21 நாட்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டாலேயே கொடுத்த கடன் வசூலாவதையும் காணலாம் .
சிலருக்கு கொடுத்த கடன்கள் மேற்சொன்ன பரிகாரங்கள் செய்தபின்னரும் கொடுத்த தொகை முழுமையாக திரும்பப் பெறுவதில் சிக்கல் நீடிக்கும். இதற்கு உங்களுடைய வீட்டில் எதிர் நிலையான ஆற்றல் இருந்தாலும் கடன் திரும்ப வசூலாகாது. இதன் போது வீட்டிற்குள் கைக்கு எட்டாத உயரத்தில் வெள்ளெருக்கு விநாயகரை வைத்து விட வேண்டும். இப்படி செய்தால், வீட்டில் எதிர்நிலையான ஆற்றல் அகன்று, நேர்நிலையான ஆற்றல் பெருகி, நல்லபலன் கிட்டும்.
வேறு சிலர் கடன்கொடுத்தவர்களுக்கு பரிகாரங்களை சொல்லியிருக்கிறீர்களே... கடன் வாங்கியவர்கள் என்ன செய்தால் கடனாளி என்ற நிலையிலிருந்து மீள இயலும்? என கேட்பர். இவர்கள் யோக நரசிம்மர் வழிபாடு செய்தால் கடன் தீரும். லட்சுமி நரசிம்மர் வழிபாடும் சிறிய அளவிலான கடன்கள் விலகும்.
கழுத்தை நெறிக்கும் அளவிற்கு கடன் பிரச்சினை இருந்தால், அதிகாலையிலேயே எழுந்து அருகிலுள்ள அரசமரத்தை 21 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதிகாலையில் 3: 30 மணி முதல் ஏழு மணிக்குள் நவதானியங்களை தனித்தனியாக வைத்துக்கொண்டு அதன் மீது புது அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, சிவப்பு திரியை போட்டு விளக்கேற்ற வேண்டும். இதனை 48 நாட்கள் தொடர்ந்து வழிபட வேண்டும். பிரார்த்தனை செய்த பிறகு, இதனை கடல் நீரில் விட்டு விட வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் கடனாளியாக இருந்த நிலை மாறி, மகிழ்ச்சியான மனிதாராக அதாவது கடனில்லா மனிதராக மாறிவிடுவீர்.
தொகுப்பு சுபயோகதாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM