மோட்டார் சைக்கிள் செலுத்தியவாறு டிக் டொக் செய்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

30 Jan, 2024 | 04:50 PM
image

மோட்டார் சைக்கிளிலை செலுத்திக்கொண்டு கையடக்கத் தொலைபேசியில் டிக் டொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞர்கள் காரில் மோதி விபத்துள்குள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தானது ஹொரணை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் 4 மோட்டார் சைக்கிள்களுடன் கொழும்பு பிரதேசத்தில் இருந்து ஹொரணை பிரதேசத்தை நோக்கி பயணித்துள்ளனர்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளை அதிக வேகத்தில் செலுத்திச்செல்வதை காணொளி எடுக்க முனைந்த போது இரு இளைஞர்கள் செலுத்திய மோட்டாள் சைக்கிளின் பின்புறத்தில் கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 5 இளைஞர்களில் 2 இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , ஏனைய 2 இளைஞர்கள் 3 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு இளைஞர் தனது மோட்டார் சைக்கிளுடன் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன்...

2026-07-18 13:12:46
news-image

10 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத்...

2026-07-18 13:11:53
news-image

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால்...

2026-07-18 13:09:43
news-image

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் ஆசி பெற்றார்...

2026-07-18 12:34:33
news-image

நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த காற்று...

2026-07-18 12:23:27
news-image

25 ஆண்டுகள் பழமையான கொலை வழக்கு...

2026-07-18 11:44:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை...

2026-07-18 11:07:56
news-image

பெண்களின் திறன்களை வெளிக்கொணர்வதில் CCWE வழங்கும்...

2026-07-18 11:09:56
news-image

வவுனியாவில் விபத்து: நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன்...

2026-07-18 10:00:56
news-image

உடலுக்குள் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து கடத்தி...

2026-07-18 09:44:20
news-image

அலவத்துகொடையில் மண் மேடு இடிந்து விழுந்து...

2026-07-18 08:43:27
news-image

இன்றைய வானிலை 

2026-07-18 06:33:05