நுவரெலியா லிந்துலை விவேகாலயா தமிழ் வித்தியாலய அதிபர் 35 வருடகால சேவையிலிருந்து ஓய்வு

Published By: Vishnu

30 Jan, 2024 | 01:39 PM
image

நுவரெலியா லிந்துலை விவேகாலயா தமிழ் வித்தியாலயத்தின்  அதிபர் பழனிவேல் தீனதயாளன் தனது 35 வருட கால கல்விச் சேவையிலிருந்து செவ்வாய்க்கிழமை (30) ஓய்வு பெறுகின்றார்.

தலவாக்கலை பெரிய மல்லிகைப்பூ தோட்டத்தை சேர்ந்த  ஜெகநாதன் பழனிவேல் கமலம்  தம்பதிகளுக்கு 1964 ஆம் ஆண்டு மகனாக பிறந்த இவர்  தனது ஆரம்பகால கல்வியை  மிடில்டன்  தோட்டப்பாடசாலையிலும்,  இடை நிலை கல்வியை தலவாக்கலை சுமனமகா வித்தியாலயத்திலும், உயர்கல்வியை தலவாக்கலை   தமிழ்  மகா வித்தியாலயத்திலும்   பயின்றதோடு,காமராஜர் பல்கலைக்கழகத்தில்  அரசியல்துறையில்  தனது பட்டப்படிப்பை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில்,  தான் கல்வி கற்ற தலவாக்கலை தமிழ்  மகா வித்தியாலயத்தின்  ஆங்கில ஆசிரியராக 1990ஆம் ஆண்டு தனது ஆசிரியர் சேவையில் இணைந்தார். அங்கு 11 வருடங்கள் பணியாற்றிய இவர்  பின்னர் வட்டகொடை தமிழ் வித்தியாலயத்தில் 3 வருடங்கள் ஆசிரியராக பணியாற்றியதேடு 2003 இல் அக்கரகந்த தமிழ் வித்தியாலயத்தின்  பதில் அதிபராக பணியேற்றார். 2009 ஆம் ஆண்டு அப்பாடசாலையின் அதிபராக நியமனம் பெற்றார்.

தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு லிந்துலை   இராணிவத்தை தமிழ் வித்தியலாயத்தின் அதிபராக கடைமையேற்று பணிபுரிந்ததோடு 2017 இல் லிந்துலை விவேகாலயா தமிழ் வித்தியாலயத்தில் கடமையேற்று கடந்த 7 வருடங்களாக அப்பாடசாலையின் வளர்ச்சிற்கு பெரும்பங்காற்றிய நிலையில் தனது அதிபர் சேவையில் இருந்து  இன்று ஓய்வு பெறுகின்றார்.

இவர் தான் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையேற்ற அனைத்து பாடசாலைகளிலும் கல்வி வளர்ச்சி, பௌதீக வள அபிவிருத்தி மற்றும் ஏனைய செயற்பாட்டிலும் மிகவும் அர்ப்பணிப்புடன் பங்களிப்புச் செய்து வந்துள்ளார். அத்தோடு கல்வி மற்றும் இன்றி மாணவர்களை விளையாட்டுத்துறை, கலைதுறை என ஏனைய செயற்பாடுகளிலும் பங்கு பற்ற வைத்து தரம் உயர்த்தியுள்ளார். இவர் தான் பணியாற்றிய தோட்டப்புற பாசாலைகளையும் நகர்புர பாடசாலைகளுக்கு இணையாக கல்வி வளர்ச்சியில் மேன்மடைய செய்வதில் பெரும் பங்காற்றியுள்ளார். ஆசியர்களின் உரிமைக்கு  தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளதோடு , தான் பணிப்புரிந்தபாடசலைகளை பல வழிகளிலும்  முன்னேற்றப்பாதைக்கு   கொண்டு சென்றுள்ளார்.

தான் கல்வி கற்று ஆங்கில ஆசிரியராக பணியாற்ற ஆரம்பித்த  தலவாக்கலை தமிழ் மகாவித்தியாலயத்தில் தனது பாடசாலை நண்பர்களோடு இணைந்து பழைய மாணவர்சங்கத்தை உருவாக்கியதில் பெரும் பங்களிப்பு செய்துள்ளார். அத்தோடு தான் பிறந்த   பெரியமல்லிகைப்பூ தோட்டத்திற்கு மிடில்டன் இளைஞர் கழகத்தை உருவாக்கி அதனை வழிநடத்தி சமூக ரீதியிலும் கலை கலாசார ரீதியிலும்  பல பங்களிப்பு செய்துள்ளார். சமூக முன்னேற்றத்திற்காக தலவாக்கலையில் பல்வேறு போராட்டங்களிலும் தன்னை அர்பணித்துள்ளார். இவரது சமூகபணியை கௌரவித்து 2005ஆம் ஆண்டு  சமாதான நீதவான் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓய்வு பெறும் அதிபருக்கு லிந்துலை விவேகாலயா பாடசாலையின் ஆசிரியர் குழாமினர் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (28) சேவை நலன் பாராட்டு விழா நடத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08