இலங்கை விமானப் படையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றுவரும் சைக்கிளோட்டப் போட்டியில் இலங்கை கடற்படை ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

இலங்கை விமானப்படையின் சைக்கிள் ஓட்டப் பந்தையம் 2017 இம் முறை 18 ஆவது தடவையாக இலங்கை விமானப்படையினால் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றது.

415 கிலோ மீற்றர் தூரத்தை உள்ளடக்கிய, குறித்த சைக்கிள் ஓட்டப் பந்தையம் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகி 3 கட்டங்களாக இடம்பெற்றது.

இந்நிலையில் விமானப்படையின் சைக்கிள் ஓட்டப் பந்தையம் 2017 இல் 2 ஆவது கட்டமாக இடம்பெற்ற போட்டியில் இலங்கை கடற்படை வீரர் ஹேமந்த குமார முதலிடத்தைப் பெற்றார்.

அதேவேளை, 3 ஆவது கட்டமாக இடம்பெற்ற சைக்கிளோட்டப் பந்தையத்தில் இலங்கை கடற்படை வீரர் அவிஷ்க மெதொன்ச சிறந்த இளம் சைக்கிளோட்ட வீரருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.