(நெவில் அன்தனி)
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு 16 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
உப்புல் தரங்க தலைமையிலான தெரிவுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட இந்த குழாம் விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வாவின் புதிய தலைமையிலான இலங்கை குழாத்தில் முன்னாள் தலைவர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.
இந்த நால்வரில் தினேஷ் சந்திமாலைத் தவிர மற்றைய மூவரும் தேசிய சுப்பர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கடந்த வாரம் சதங்கள் குவித்து அசத்தியிருந்தனர்.
டெஸ்ட் அணியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குசல் மெண்டிஸும் கடந்த வாரம் அரைச் சதம் குவித்து திறமையை வெளிப்படுத்தியதுடன் கமிந்து மெண்டிஸ் சதம் குவித்திருந்தார்.
ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்க, விக்கெட் காப்பாளர் சதீர சமரவிக்ரம, வேகப்பந்துவீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ராஜித்த, சுழல்பந்துவீச்சாளர்களான ப்ரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தொடர்ந்தும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
அவர்களைவிட விக்கெட் காப்பாளர் லஹிரு உதார, வேகப்பந்துவீச்சாளர்களான மிலான் ரத்நாயக்க, சாமிக்க குணசேகர ஆகியோரும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM