முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிநேசன்துரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த பிணை மனுவை இன்று மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் நிராகரித்தார்.

இன்று காலை மேல் நீதமன்றத்தில் இவரது வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆறு  சட்டத்தரணிகள் பிள்ளையான் தரப்பில் ஆஜராகினர்.

இருந்த போதிலும் மே மாதம் 4 ம்திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளதுடன், மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2005.12.25 அன்று நத்தார் ஆராதனையில் மட்டக்களப்பு புனிதமரிளாள் தேவாலயத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைபபு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் தொடர்ந்து விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.