யுத்தத்தை தோற்கடிப்பதற்கான மனிதாபிமான பணியை வழிநடத்திய, இலங்கை இராணுவத்தின் 20 ஆவது தளபதியான லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க திங்கட்கிழமை (29) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் தயா ரத்நாயக்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நியமித்தார்.
குருநாகல் மலியதேவ கல்லூரியின் பழைய மாணவரான இவர் 35 வருடங்களுக்கும் மேலாக (1980-2015) இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு தலைமை தாங்கி செயற்பட்டார்.
இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராகவும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியின் அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
1980 இல் கடெற் பிரிவில் பங்காற்றி தனது இராணுவ வாழ்க்கையைத் தொடங்கிய அவர்,இலங்கை இராணுவ அகாடமியில் தனது அடிப்படைப் பயிற்சியை முடித்த பின்னர் 1981 இல் இலங்கை காலாட்படையின் இரண்டாவது லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.
பின்னர் கமாண்டோ அதிகாரிகள் பாடப்பிரிவில் காலாட்படை இளம் அதிகாரிகள் பாடநெறி மற்றும் படையணிக்கான ஆயுத ஒத்துழைப்பு கற்கைநெறியை நிறைவு செய்தார்.
புனர்வாழ்வுப் பணியகத்தின் ஆணையாளர் நாயகமாக 12,000 முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் புனர்வாழ்வுக்காகவும் பணியாற்றினார்.
இலங்கை இராணுவ அகாடமியின் கட்டளைத் தளபதி, ஊடகப் பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் இராணுவப் பேச்சாளர் போன்ற பதவிகளை அவர் வகித்தமை அவரை தனித்துவம் மிக்க அதிகாரியாக காட்டியது.
யுத்தத்திற்கு பிறகு,மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க 2013 ஆகஸ்ட் மாதம் 01 ஆந் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
லெப்டினன் ஜெனரலாகவும் பதவியுயர்த்தப்பட்ட அவர், ஓய்வு பெற்றதும் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். தயா ரத்நாயக்க நாட்டின் அதிக கௌரவங்களைப் பெற்ற இராணுவ அதிகாரிகளுள் ஒருவராவார்.
இராணுவத்தில் பணியாற்றிய போது யுத்தத்தில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவரது வீரதீரச் செயல்களை கௌரவித்து, வீர விக்ரம விபூஷண, ரண விக்ரம பதக்கம்,ரண ஷூர பதக்கம்,உத்தம சேவா பதக்கம்,தேச புத்ர பதக்கம் போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM