தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு இன்று திங்கட்கிழமை (29) கைச்சாத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கைச்சாத்திடப்பட்டது.
இதன்போது கொழும்பு வர்த்தக உர நிறுவனம் மற்றும் இலங்கை உர நிறுவனம் ஆகியன இலங்கை தேயிலை சபை மற்றும் சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் உடன்படிக்கையை மேற்கொண்டது.
இதன்போது இலங்கை தேயிலை சபை மற்றும் சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர மூலமாக தேயிலை உரங்கள் கையளிக்கப்பட்டன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற ஐந்து வகையான உரங்களை 2,000 ரூபாவாக குறைத்து விவசாயிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM