யாழில் 10 கிலோ மாட்டிறைச்சி, 20 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

29 Jan, 2024 | 03:43 PM
image

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 10 கிலோ மாட்டிறைச்சி மற்றும் 20 மதுபான போத்தல்களுடன் சந்தேக நபரான வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

அல்லைப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடொன்று இறைச்சியாக்கப்படுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது , மாடொன்று இறைச்சியாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அருகில் உள்ள வீட்டின் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் , குறித்த வீட்டில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அதன் போது வீட்டினுள் இருந்து 20 மதுபான போத்தல்களையும்  குளிர்சாதன பெட்டியில் இருந்து 10 கிலோ இறைச்சியையும் மீட்டதுடன் , வீட்டின் உரிமையாளரையும் கைது செய்தனர். 

தமது வீட்டில் கொண்டாட்டம் ஒன்றிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் , அதற்காகவே மதுபான போத்தல்களும் , இறைச்சியும் இருந்தது என வீட்டார் கூறிய போதிலும் , பொலிஸார் அதனை ஏற்காது குடும்பஸ்தரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு...

2026-05-21 16:47:41
news-image

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டுக்கான சிறுபோக...

2026-05-21 16:52:26
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும்...

2026-05-21 16:51:04
news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 16:40:19
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40