அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு சோதனையிடச் சென்ற வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை கூரிய ஆயுதங்களால் தாக்கிய தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய தந்தையும் 24 வயதுடைய மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மான் இறைச்சிகள் இருப்பதாக மொரகொட பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர்கள் குறித்த வீட்டிற்கு சோதனைக்காக சென்ற அதிகாரிகளிடம் அவர்களது கடமைகளை நிறைவேற்ற விடாமல் அவர்களை தாக்கியுள்ளனர்.
காயமடைந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பில் தொலைபேசி ஊடாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்களை அவர்களது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மான் இறைச்சியுடன் கைது செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM