ஐநா அமைப்பிற்கான நிதி இடை நிறுத்தும் காசா மக்களிற்கு எதிரான கூட்டுத்தண்டனை - நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர்

Published By: Rajeeban

29 Jan, 2024 | 12:28 PM
image

பாலஸ்தீன அகதிகளிற்கான ஐநாஅமைப்பிற்கான நிதிஉதவி இடைநிறுத்தத்தை அவுஸ்திரேலியா கைவிடவேண்டும் என்ற வேண்டுகோள்கள் வெளியாகியுள்ளன.

யுஎன்ஆர்டபில்யூஏ அமைப்பின் உறுப்பினர்கள் ஹமாசுடன் இணைந்து இஸ்ரேலிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டனர் என வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அவுஸ்திரேலியா உட்பட 9 நாடுகள் அந்த அமைப்பிற்கான நிதிஉதவியை இடைநிறுத்தியுள்ளன.

இந்த நடவடிக்கையால் பேரழிவு ஏற்படலாம்  என நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலென் கிளார்க் தெரிவித்துள்ளார்.

காசாவின் மிகப்பெரிய சேவை வழங்குநராக பாலஸ்தீனிய அகதிகளிற்கான ஐநா அமைப்பு காணப்படுவதால் அந்த அமைப்பிற்கான நிதி நிறுத்தம் காரணமாக பேரழிவு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐநா அமைப்பில் 13000 பேர் பணியாற்றுகின்றனர் ஆனால் 13 பேருக்கு எதிராகவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அவர் ஐநா அமைப்பிற்கான உதவியை நிறுத்தும் தீர்மானம் முற்றிலும் அளவுக்குமீறிய நடவடிக்கை எனவும் நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் 9 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் ஒருவர் உயிரிழந்துவிட்டார் இருவரை கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச்சாட்டுகளை கையாள்வதில் ஐநா மிகவும் தாமதமாக செயற்பட்டது இதன் காரணமாகவேஅவுஸ்திரேலியா அமெரிக்கா உட்பட நாடுகள் உதவிகளை நிறுத்தியுள்ளமை கூட்டு தண்டனை போல தோன்றுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐநா அமைப்பினை நிதி அடிப்படையில்முடக்கினால் காசாவில் வசிக்கும் குடும்பங்களிற்கு அது பெருந்தாக்கத்தை  ஏற்படுத்தும் எனவும் நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆபாச வார்த்தை பேசினால் அபராதம்...!

2026-04-12 11:26:56
news-image

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி...

2026-04-12 10:36:35
news-image

அமெரிக்காவின் எதிர்ப்பால் சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை...

2026-04-12 10:22:00
news-image

ஹெய்ட்டியில் சனநெரிசலில் சிக்கி 30 பேர்...

2026-04-12 09:42:50
news-image

அமெரிக்கா–ஈரான் 14 மணி நேர பேச்சுவார்த்தை...

2026-04-12 07:04:54
news-image

பேச்சுவார்த்தையால் அமைதி திரும்பும்: பாகிஸ்தான் பிரதமர்...

2026-04-12 00:02:11
news-image

ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா...

2026-04-11 18:40:49
news-image

போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி : பேஸ்புக்,...

2026-04-11 17:59:18
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமரை...

2026-04-11 17:37:56
news-image

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்...

2026-04-11 18:16:49
news-image

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா...

2026-04-11 15:39:27
news-image

உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு...

2026-04-11 14:21:09