குருணாகல் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 11 நாட்களே ஆன ஆண் சிசுவின் பெற்றோரை கைது செய்ய குருணாகல் நீதவான் நீதிமன்றம் குருணாகல் பொலிஸாருக்கு உத்தரவிடுள்ளது .
குறித்த சிசு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிந்ததாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர் .
குருணாகல் போதனா வைத்தியசாலையில் குழந்தையின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னர் குருணாகல் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது .
குறைப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய், குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துவிட்டு யாரிடமும் கூறாமல் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையை விட்டுச் வெளியேறியுள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோரைக் கண்டுபிடித்து அவர்கள் தொடர்பான இரத்த மாதிரியை பரிசோதனை செய்யுமாறு குருணாகல் நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது .
குழந்தையின் பெற்றோர் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்பதால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த விடயம் குறித்து அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
பொல்கஹவெல கொடவெல பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியரே இந்த சிசுவின் பெற்றோர் என சந்தேகிக்கப்படுவதாகவும், இந்த இளம் யுவதியே குழந்தையை பிரசவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
அவர்கள் வைத்தியசாலைக்கு வழங்கிய முகவரி போலியானது என பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்ததன் காரணமாக அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM