பெண்களை பாதிக்கும் இதய நோய்கள்

Published By: Nanthini

29 Jan, 2024 | 12:17 PM
image

திக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன், புகை, மதுப் பழக்கம், அதிக கொழுப்பு, மன அழுத்தம்... இவை தவிர, மாதவிடாய்க்குப் பின்னர் ஏற்படும் ஹோர்மோன் கோளாறுகளும் காரணமாக உள்ளது.

உடல் பிரச்சினைகள் தவிர வேறு காரணங்கள் 

இதய நோய் பரம்பரையாக ஏற்படலாம். இதற்கு வயோதிகமும் ஒரு காரணம். வாழ்க்கை முறை மாற்றத்தினால் இளம் வயதினருக்கும் இதயநோய் சமீப காலத்தில் வருவது அதிகரித்து உள்ளது.

இரத்த அழுத்தமும் இதயமும் 

இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, உடலில் உள்ள இரத்த நாளங்களில் வேறுபாடு நிகழ்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம், உடலின் முக்கிய நாளங்களில் வெடிப்பு, ஆகியவை நிகழ்கின்றன. இவை உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.

இதய கோளாறு அறிகுறிகள் ஆண்களிடமிருந்து மாறுபட்டதா?

மாரடைப்புக்கான அறிகுறிகள் சில சமயம் பெண்களிடம் மாறுபட்டு தெரியலாம். இலேசான வலி, வயிறு தொடர்பான உபாதைகள் என்று இருக்கும். மார்பு அல்லது வயிறு தொடர்பான பிரச்சினை என்று நினைத்து மருத்துவ ஆலோசனை பெறாமல் போகலாம்.

இதயக் கோளாறு இருந்தால் கர்ப்பம் தரிக்கலாமா?

இதயத்தில் எந்த மாதிரியான கோளாறு என்பதை முறையான மருத்துவ பரிசோதனையில் அறிந்து, மருத்துவரின் ஆலோசனையை இந்த விடயத்தில் பின்பற்றுவது பாதுகாப்பானது.

இதய நோய் உள்ள பாலூட்டும் பெண்கள் செய்ய வேண்டியது 

ஒரு சில மருந்துகள் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இது பற்றி அவர்களின் மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

பெண்களுக்கான சிகிச்சை முறையில் வேறுபாடு உள்ளதா?

பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது. ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சை முறைதான் பெண்களுக்கும். இரத்த நாளங்கள் சிறியதாகவும் மெல்லியதாகவும் இருந்தால் சிகிச்சை வேறுபடும்.

இதய கோளாறு வருவதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

நீரிழிவு, கொழுப்பு, உப்பு மிகுந்த உணவை தவிர்க்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் தினமும் அரை மணிநேரம் நடைப்பயிற்சி அல்லது ஜொக்கிங் அல்லது நீச்சல் பயிற்சி செய்வதும் இதயத்துக்கு நல்லது. மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிகவும் அவசியம்.

எந்த வயதில் இதய நோய் பாதிப்பு ஏற்படும்? 

எந்த வயதிலும் பெண்களுக்கு இதய நோய்கள் வரலாம். 

பெண்களை மட்டும் பாதிக்கும் இதயப் பிரச்சினைகள் என்ன?

கர்ப்ப காலங்களில் வரும் இதய நோய்கள்தான் பெண்களை மட்டும் பாதிப்பவை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்