பெலியத்தை பகுதியில் மூதாட்டி ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது பேரன் பெலியத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யப்பட்டவர் 15 வயதுடைய பாடசாலை மாணவன் எனவும் இவர் பாடசாலையின் மாணவ தலைவனாகவும் செயற்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர் .
கடந்த 17ஆம் திகதி குறித்த மாணவனின் பாட்டி வீட்டில் உயிரிழந்துள்ளதுடன் இது தொடர்பில் பேரன் கிராம அதிகாரியிடம் தெரிவித்துள்ளார் .
கிராம அதிகாரியின் அறிவுறுத்தலின்படி பேரன் தனது பாட்டி இறந்து விட்டதாக பெலியத்தை பொலிஸாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார் .
உயிரிழந்த மூதாட்டியின் இறுதிச்சடங்கு கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் உயிரிழப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அயல் வீட்டில் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
கடந்த 30 திகதி இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் இது தொடர்பில் மூதாட்டியின் பேரனிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர் .
பொலிஸாரின் விசாரணையில் தானே தங்க நகைகளை திருடியாதாக பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டார் .
மேலும் இவருடைய மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்க நகையையும் தான் திருடியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்திருத்தார் .
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவருடைய தகவலுக்கமைய அயல் வீட்டில் திருடப்பட்ட தங்க நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் .
இந்நிலையில் குறித்த மூதாட்டியின் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ள நிலையில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார் .
இதனைதொடர்ந்து உயிரிழந்த மூதாட்டியின் சடலம் இன்று திங்கட்கிழமை (29) தோண்டி எடுக்கப்படவுள்ளது .
இந்த சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM