தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூட்டத்தின் போது கைகலப்பில் ஈடுபட்டோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

Published By: Vishnu

28 Jan, 2024 | 09:59 PM
image

ஆர்.ராம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டின் பொதுச்சபைக் கூட்டத்தின் முதலாவது நாள் அமர்வின்போது பதவிநிலைத் தெரிவுகள் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தக்கம் கைகலப்பில் முடிந்துள்ளது. 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொதுச்சபை உறுப்பினர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் அறிவித்துள்ளார்.

குறிப்பாக, பொதுச்செயலாளராக சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டதை அடுத்து கட்சியின் திருகோணமலை மாவட்ட பொதுச்சபையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அதனை கடுமையாக விமர்சித்தார்கள். 

விசேடமாக மத்திய குழுவில் தீர்மானத்தினை எடுத்ததன் பின்னர் அதனை அப்படியே ஏற்றுக்கொள்வதாக இருந்தால் பொதுச்சபையில் உறுப்பினர்களாக இருக்க வேண்டியதன் அவசியம் என்னவென்று கேள்விகளைத் தொடுத்தனர்.

இந்த நிலைமையில், வாய்த்தர்க்கம் கடுமையானதில் திருகோணமலை மாவட்டத்தின் ஒரு குழுவினர் தர்க்கம் செய்த குழுவினர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் கைகலப்பு உருவாகியிருந்தது. 

பின்னர் நிலைமைகளை ஏனைய உறுப்பினர்கள் கட்டுப்படுத்தியிருந்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரின் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று புதிய தலைவர் சிறீதரன் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சர் சமந்த வித்தியாரத்ன - அமெரிக்க...

2025-03-26 12:36:39
news-image

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதலாவது...

2025-03-26 12:48:24
news-image

போதைப்பொருள் கடத்தல்காரரான “படோவிட்ட அசங்க”வின் உதவியாளர்...

2025-03-26 12:53:34
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-26 13:19:39
news-image

வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியின்...

2025-03-26 12:38:35
news-image

வடக்கு மீனவர் பிரச்சனை ; இருதரப்பு...

2025-03-26 11:49:47
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய...

2025-03-26 11:36:32
news-image

இரவு நேர களியாட்ட விடுதி மோதல்...

2025-03-26 11:27:01
news-image

இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச்...

2025-03-26 11:41:56
news-image

வெளிநாட்டு நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து...

2025-03-26 11:43:27
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

2025-03-26 11:04:01
news-image

போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

2025-03-26 11:08:30