உயர்நீதிமன்றம் வழங்கிய திருத்தங்கள் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தில் உள்வாங்கப்படும் - வஜிர அபேவர்தன 

28 Jan, 2024 | 05:45 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் திருத்தங்கள் உள்வாங்கப்படும். அவ்வாறு உள்வாங்காமல் இருந்தால், அது தேவையில்லை என்பதால் உள்வாங்காமல் இருக்க முடியும். அத்துடன் உலக நாடுகளில் இருக்கும் சட்டத்தை விட மிகவும் தளர்வான சட்ட திட்டங்களே குறித்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் குறித்து தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறு‍கையில்,

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் காரணமாக டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். 

உலகில் 137 நாடுகளில் இந்த சட்டம் செயற்பட்டு வருகிறது. அப்படியாயின், அந்த நாடுகளில் டிஜிட்டல் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு எதுவம் இல்லை. அதனால் இதனை அரசியலாக்க வேண்டாம். ஒட்டுமொத்த இலங்கை நாகரிகத்தை எதிர்பார்ப்பதாக இருந்தால் இந்த விடயங்கள் செயற்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன், உலகில் 194 நாடுகளில் 137 நாடுகளில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் இருக்கும் சட்ட திட்டங்களைவிட மிகவும் இலகுவானதாகும். அதன் பிரகாரம் இலங்கையின் நாகரிகம் இந்த சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்ட திட்டங்கள் போதாது. உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் போன்று இதனை செயற்படுத்த வேண்டியிருக்கிறது.

மேலும், இந்த சட்டமூலத்துக்கு உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் திருத்தங்களை உள்வாங்குவோம். அவ்வாறு உள்வாங்காமல் இருப்பதாக இருந்தால் அது தேவையில்லை  என்பதால் உள்வாங்காமல் இருக்க முடியும். என்றாலும், உயர்நீதிமன்றம் சில பிரிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்த விடயங்களுக்கு மாற்றமாக எதுவும் இடம்பெறப்போவதில்லை.

அத்துடன், இந்த சட்டத்தை செயற்படுத்த ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும். உலக நாடுகளிலும் இதற்காக ஆணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இலங்கையில் கொண்டுவந்திருக்கும் இந்த சட்டம், சிங்கப்பூரில் இருப்பதை விட கடுமையானது அல்ல. சிங்கப்பூரில் சில விடயங்களுக்கு ஒரு மில்லியன் டொலர் வரை தண்டப்பணம் விதிக்க முடியும். அந்தளவு கடுமையான சட்டமல்ல.

மாறாக, அவற்றை விட இலகுவான, ஜனநாயக ரீதியான, பிரித்தானிய அரசியலமைப்புக்கு அமைய, இந்தியாவின் அரசியலமைப்புக்கு அமைய ஆசிய நாடுகளின் அரசியலமைப்புகளுக்கு அமைவாக மிகவும் தளர்வான அளவே இந்த சட்டமூலத்தின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடுகிறது !

2024-06-14 18:08:19
news-image

நீர்கொழும்பு கடலில் மூழ்கி இரு மாணவர்கள்...

2024-06-14 22:16:30
news-image

தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார் ;...

2024-06-14 22:31:10
news-image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்...

2024-06-14 20:17:48
news-image

நுவரெலியாவில் போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு ...

2024-06-14 20:10:57
news-image

தேர்தல் விவகாரங்களில் தலையிடவில்லை - சர்வதேச...

2024-06-14 17:33:56
news-image

இராணுவம் மீதான யுத்தக் குற்றச்சாட்சியங்களை சேகரிக்கும்...

2024-06-14 19:43:25
news-image

இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையர்களை...

2024-06-14 19:30:54
news-image

வடக்கின் 3 மாவட்டங்களில் 6 இடங்களில்...

2024-06-14 19:26:50
news-image

நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் குறைவடைந்துள்ளன ;...

2024-06-14 19:18:57
news-image

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும்...

2024-06-14 18:28:24
news-image

கம்பஹா வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக நீர் நிலைகளை...

2024-06-14 20:22:31