சீரற்ற காலநிலையால் பெரும் அழிவை சந்தித்த விவசாய நிலங்கள்

28 Jan, 2024 | 04:32 PM
image

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

நாட்டில் ஏற்பட்ட அண்மைய சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில் செய்கையிடப்பட்ட நெற்செய்கை பெரிதும் அழிவடைந்தது. கனமழை, குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும், வேளாண்மை செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பல்வேறு கஷ்டங்களுடன் விதைத்த நெற்செய்கையானது வெள்ள நீரில் மூழ்கியதுடன் எந்த வித இலாபமும் இன்றி நஷ்டத்தையும் எதிர்நோக்கியதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். 

பெரும்போக செய்கையில் தற்போது அறுவடை இடம்பெற்று வரும் நிலையில், விளைச்சல் குறைவாகவும் உள்ளதாக தெரிவிக்கின்றனர். 

ஒரு ஏக்கருக்கு பத்து மூடைகளுக்கு உட்பட்ட விளைச்சல் தான் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இயந்திர வெட்டுக் கூலியாக ஒரு ஏக்கருக்கு 15,000 ரூபாய் வீதம் செலவாகிறது எனவும் இதனால் தாங்கள் கஷ்டப்பட்டு மனைவி, பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்து செய்கையில் ஈடுபட்டபோதும் பெரும் நஷ்டவாளியாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, தம்பலகாமம், குச்சவெளி, மொறவெவ, கந்தளாய், சேருவில உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் பெரும்போக நெற்செய்கை செய்கையிடப்பட்டிருந்த போதும் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

கிருமிநாசினிகளின் விலை அதிகரிப்பு, நோய் தாக்கம் போன்ற காரணங்களால் விளைச்சலில் குறைவும் காணப்படுகிறது. தற்போது ஒரு மூடை நெல்லின் விலை 6000 ரூபாய் வரை செல்கிறது. 

வயலை உழுதல் முதல் வெட்டுக்கூலி பசளை போன்ற பல செலவுகள் போக கையில் முதலீடு செய்யப்பட்ட பணம் கூட கிடைக்கவில்லை என பெரும்போக அறுவடையில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் அரசாங்கம் தங்களுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத் தருமாறும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 1,21,500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் திருகோணமலை மாவட்டத்தில் 49500 ஹெக்டேயர் பரப்பிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 75200 ஹெக்டேயரிலும், அம்பாறை மாவட்டத்தில் 6800 ஏக்கரிலும் செய்கை மேற்கொள்ளப்பட்டது எனவும் வெள்ள நிலைமை காரணமாக சுமார் 50 வீதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாகாண விவசாய பணிப்பாளர் தெரிவித்தார்.

மகாவலி கங்கை, சேனாநாயக்க சமுத்திரம், கந்தளாய் குளம் போன்றவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் பாரிய வெள்ள நிலைமை காரணமாக நெற்செய்கை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பாதிப்பு தொடர்பில் கிண்ணியா சோளவெட்டுவான் விவசாயி ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

"இம்முறை செய்த வேளாண்மை பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சொந்தமாக 23 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொண்டுள்ளேன். அது மொத்தமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. எங்களுக்கு அரசாங்கம்தான் நஷ்ட ஈட்டை பெற்றுத் தர வேண்டும்" என்றார்.

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கண்டக்காடு, மயிலப்பஞ்சேனை, சோலை வெட்டுவான் முதலான இடங்களில் செய்கையிடப்பட்ட வயல் நிலங்கள் தொடர்ச்சியாக நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

இப்பகுதியில் சுமார் 250 ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் இம்முறை பெரும்போக வேளாண்மை பயிர்ச்செய்கை   மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

பராக்கிரமபாகு சமுத்திரம், மகாவலி, கந்தளாய்க் குளம் முதலான பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இவ்வாறு வெள்ள நீரினால் மூழ்கிய பகுதிகளில் ஒன்றான கிண்ணியா பரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட கண்டக்காடு, சோலை வெட்டுவான் முதலான இடங்களில் செய்கையிடப்பட்ட வயல் நிலங்களே வெள்ள நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.  

இதனால் கடன் பட்டு, கஷ்டப்பட்டு செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதனால் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை  தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் பாரிய நஷ்டத்தை இம்முறை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் எதிர்வரும் சிறுபோகத்துக்கான பசளைகள் கிருமி நாசினி வகைகளை குறைந்த விலையில் தரமாக வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். 

நெற்செய்கையின்போது ஏற்படும் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த கிருமி நாசினிகளை பாவித்தாலும் அதில் பயனில்லை. அது தரமற்ற உற்பத்தியாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். 

ஒரு வகை மஞ்சள் நோய்த்தாக்கம் காரணமாக விளைச்சலில் குறைவை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நோய்த்தாக்கம் தொடர்பில் விவசாய திணைக்களம் ஊடாக தம்பலகாமம் பிரதேச விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், விவசாயிகள் அதன் மூலம் வெற்றி கொள்ளவில்லை. எப்படியாக இருந்தாலும், கடந்த முறை அரசாங்கம் மானியம் தருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகளிடத்தில் கூறிய போதும் மானியம் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். 

விவசாய அழிவின் தாக்கம் தொடர்பில் தம்பலகாமம் பத்தினிபுர விவசாயி ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்.

"கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு இரண்டு மூடைகள் கூட கிடைக்காத விளைச்சல் தான். இதனால் நஷ்டமடைந்துள்ளோம். வெட்டுக்கூலி, ஏனைய எண்ணெய் வாங்கிய கடனை கொடுத்துவிட்டால் கையில் ஒன்றும் மிஞ்சப்போவதில்லை" என்றார்.

திருகோணமலை மாவட்டத்தின் பரம்பரை தொழிலாக விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குளங்களை நம்பியும் சிறு போக பெரும்போக நெற்செய்கையை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிகளவான விவசாய நிலங்கள் இம்முறை பெரும் அழிவை சந்தித்துள்ளதால் கடன் பட்டு செய்த விவசாய பூமி அழிவடைந்துள்ளது. வெள்ள நீரின் அதிகளவான தாக்கம் கனமழை உள்ளிட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக மிக மோசமான பாதிப்புக்களை வேளாண்மை செய்கையாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர். 

நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பங்கு வகிப்பதும் விவசாய செய்கை காணப்படுகிறது. விவசாயிகளுக்கு அவர்களை ஊக்கப்படுத்தக்கூடிய வழி வகைகளை செய்து அரசாங்கம் புதியதொரு திட்டம் ஊடாக மாற்று வழிவகைக்குள் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கப்பட வேண்டும். பல வயல் நிலங்களின் ஊடாக நீர் சென்றடையக்கூடிய குளங்கள் மூலமான வாய்க்கால்களை அபிவிருத்தி செய்து பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்க உரிய அரச துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். நெல்லுக்கான நிர்ணய விலையை பெற்றுக் கொடுக்கவும், தரமான பசளை கிருமி நாசினிகளை வழங்கவும் வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கைகளாக காணப்படுகின்றன. 

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஷ்ட ஈடுகளை துரித கதியில் வழங்கவும் வழி சமைத்துக் கொடுக்க முன்வர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்க்கட்சியை கைப்பற்ற மோதும் ரணில், சஜித்...

2024-10-12 10:12:06
news-image

யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து புதிய அரசாங்கம்...

2024-10-11 14:49:54
news-image

இலங்கையில் தேர்தல்கள் - முக்கிய அம்சங்கள்

2024-10-09 15:56:40
news-image

சர்வதேச உறவுகளில் புதிய தொடக்கத்தை ஜெனீவாவில்...

2024-10-09 15:16:10
news-image

ஜே.வி.பி.யில் அநுர குமாரவின் வளர்ச்சி 

2024-10-09 15:10:57
news-image

தரமற்ற மருந்துகளின் தாக்கமும், கொள்முதல் சட்டத்திற்கான...

2024-10-09 12:56:00
news-image

ஷேய்க் ஹசீனாவை நாடுகடத்த முடியுமா?

2024-10-07 13:14:08
news-image

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக்...

2024-10-07 12:57:19
news-image

பாரம்பரிய கட்சிகளை தண்டித்த வாக்காளர்கள்

2024-10-06 19:15:50
news-image

பேராபத்துக்குள் தமிழ்த் தேசியம்

2024-10-06 17:14:44
news-image

தமிழ் அரசுக் கட்சியுடன் பயணிப்பதில் அர்த்தமில்லை...

2024-10-06 18:31:52
news-image

தமிழ் மக்களுக்கான அரசியல் நியாயப்படுத்தலும் தீர்வுகளும்

2024-10-06 18:42:06