கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சிப் பொதுச்சந்தை   வளாகத்தினுள் நிறுத்திய வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கில் நேற்று முன்தினம் காலை 10.50 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளது.

இவ் திருட்டுச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்   நேற்றுமுன்தினம் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைவாக கிளிநொச்சி  மாவட்ட  குற்றத்தடுப்பு  பிரிவினரால்  நேற்று கரைச்சிப்பிரதேச சபையின்   அனுமதியுடன்  குறித்த வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக்  கருவியின்  காணொளி  பெறப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.