இயல்வாணன் எழுதிய 'யாரும் பாடலாம் என்னை' கவிதை நூலின் வெளியீட்டு விழா கடந்த வியாழக்கிழமை (25) மாலை கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரும் தாயகம் சஞ்சிகை ஆசிரியருமான க.தணிகாசலத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெளியீட்டுரையினை எழுத்தாளர் சட்டத்தரணி சோ.தேவராஜா வழங்கி நூலை வெளியிட்டு வைத்தார்.
நூலின் முதல் பிரதியை நூலாசிரியரின் மாமி தாமோதரம்பிள்ளை சிவபாக்கியம் பெற்றுக்கொண்டார்.
மதிப்பீட்டுரைகளை பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை ஆசிரியரான எழுத்தாளர், விமர்சகர் ந.குகபரனும் கிராமசேவகரான கவிஞர் வ.வடிவழகையனும் நிகழ்த்தினர்.
ஏற்புரையினை வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளரான கவிஞர் இயல்வாணன் நிகழ்த்தினார்.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வை கலாசார உத்தியோகத்தர் ச.தனுஜன் தொகுத்து வழங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM