‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘சுப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் தயாரான ‘லால் சலாம்’ எனும் திரைப்படத்தின் ஓடியோ வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த்,, விக்னேஷ், விவேக் பிரசன்னா, கே எஸ் ரவிக்குமார், தம்பி ராமையா, செந்தில், ஜீவிதா, நிரோஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஸ்போர்ட்ஸ டிராமா ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் பெப்ரவரி ஒன்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகைகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் ஓடியோ வெளியீடு சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்குபற்றினர்.
இதன் போது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுகையில்,“தற்போது விஜய்க்கும், எமக்கும் போட்டி என கூறுவது மிகவும் வேதனையளிக்கிறது. நடிகர் விஜய் எமக்கு முன்னாள் வளர்ந்த பையன். அவரை சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். ‘தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பின் போது விஜய்யின் தந்தை எம்மிடம் வந்து, எம்முடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. அவன் படித்துவிட்டு வந்தவுடன் நடிக்கலாம் என எம்மைச் சொல்லும்படி சொன்னார். அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்து, தனது திறமையால், உழைப்பால், உயர்ந்துள்ளார். நன்றாக நடித்து வருகிறார். அவருக்கு எம்முடைய வாழ்த்துகள்.
விஜய்க்கும், எமக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலையளிக்கிறது. அவரும் மேடையில் ‘எமக்கு போட்டி நான் தான்’ என கூறியுள்ளார். நானும் அதையே தான் சொல்கிறேன். அதனால் நடிகர் விஜய், எமக்கு போட்டி என நினைத்தால்... அது எமக்கு மரியாதை இல்லை. நானும் விஜய்க்கு போட்டி நினைத்தால்,, அது அவருக்கும் மரியாதை இல்லை.தயவுசெய்து எம்முடைய மற்றும் அவருடைய ரசிகர்கள், 'காக்கா- கழுகு' கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது எனது அன்பார்ந்த வேண்டுகோள்” என்றார்.
இதன் போது இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும் போது,“அப்பாவ சங்கின்னு சொல்லும்போது கோபம் வரும். இப்ப சொல்றேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது. அப்படி இருந்திருந்தா அவர் ‘லால் சலாம்’ படத்துல நடிச்சிருக்க மாட்டார். ஏனெனில், இது மனித நேயம் மிக்க உள்ளம் கொண்டவரால் மட்டும் தான் நடிக்க முடியும்” என குறிப்பிட்டார்.
இதனிடையே சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் ஓடியோ வெளியீட்டை ‘இசைஞானி’ இளையராஜா வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்வு காரணமாக ரத்து செய்துவிட்டு, வேறொரு திகதியில் வைத்துக்கொண்டிருக்கலாம் என்று ஒரு பிரிவினரும், இந்த நிகழ்வில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்குபற்றியிருக்கக்கூடாது. அவர் இசைஞானிக்கு ஆறுதலாக அவருடைய வீட்டிற்கு சென்றிருக்கவேண்டும் என்று மற்றொரு பிரிவினரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும், இதனிடையே நேற்று விழாவில் ‘காக்கா -கழுகு’ கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினிகாந்த் இயல்பாக பேசவில்லை என்றும், எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து, இந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என ரஜினிகாந்திற்கு ‘மேலிடத்திலிருந்து’ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM