வீடு, இடம் தொடர்பான பிரச்சினைகள் நீங்குவதற்கான பிரத்யேக பரிகாரங்கள்

27 Jan, 2024 | 05:49 PM
image

எம்மில் பலரும் தங்களது வாழ்க்கையில் மிக குறைவாக சுமார் நானூறு சதுர அடியிலாவது சொந்தமாக மனையை வாங்கி, அதில் நான்கு புறமும் சுவர் எழுப்பி, மேலே ஷீட் விரித்தாவது வீடு வாங்கி, அதில் கிரகபிரவேசம் செய்து குடிபுகவேண்டும் என விரும்புவர். பலருக்கும் இது அவர்களுடைய வாழ்நாள் பற்றாகக்கூட இருக்கும்.  வேறு சிலருக்கு வாடகை வீட்டில் சொல்ல இயலாத துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்துக்கொண்டிருப்பர்.

 இவர்கள் எப்படியாவது  அதாவது வங்கியில் கடன் பெற்றாவது வீடொன்றை வாங்கிவிடவேண்டும் என்ற தீவிர முயற்சியில் இருப்பர். ஆனால் இவர்களுக்கு வீடு, மனை, இடம், பூமி தொடர்பான சிக்கல்கள்... பிரச்சினைகள் இருந்துக்கொண்டேயிருக்கும். இதற்காக அவர்கள் சில ஆலய வழிபாட்டையும் மேற்கொள்ளத் தொடங்கியிருப்பர்.  ஆனால் பல காரணங்களால் அதை தெடரமுடியாமல் இடைநிறுத்தம் செய்திருப்பர்.  இந்நிலையில் வீடு, மனை, இடம், பூமி தொடர்பான சிக்கல்களை களைய எம்முடைய முன்னோர்கள் சிறப்பு பரிகாரத்தையும் முனமொழிந்திருக்கிறார்கள். 

வேறு சிலருக்கு அவர்கள் வாங்கிய மனை பாம்பு மனையாக இருக்கும். இல்லையெனில் வாஸ்து தோஷமுள்ள அல்லது எதிர்நிலை சக்தியால் ஆக்கிரமிக்கப்பட்ட இடமாக இருக்கும். அந்த இடத்தை விற்கவும் முடியாமல், வீடு கட்டவும் முடியாமல் தவிப்பர்.  வேறு சிலர் சொந்த வீடு கட்டியிருப்பர். ஆனால் அதில் அவர்களால் வாழ முடியாத அளவிற்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கும். இத்ததைகய நிலம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் எம்முடைய முனனோர்கள் ஆலய வழிபாட்டை பரிகாரமாக எடுத்துரைத்திருக்கிறார்கள்.

சென்னைக்கு அருகேயுள்ள சமராபுரி எனப்படும் சிறுவாபுரி முருகன் ஆலயத்திற்கு , செவ்வாய் கிழமைகளில் சென்று, பதினொரு நெய் தீபங்களை ஏற்றி, ஒன்பது முறை வலம் வந்து முருகனை வழிபடவேண்டும். இதனை தொடர்ந்து பதினொரு வாரங்கள் மேற்கொண்டால் நிலம் தொடர்பான அனைத்து சிக்கல்களும் தீர்ந்து நல்ல தீர்வு கிடைக்கும். 

சிறுவாபுரி முருகன் ஆலயத்திற்கு செல்லமுடியாதவர்கள், அந்த ஆலய மூலவரான முருகபெருமானின் புகைப்படத்தை இணையம் மூலம் பதிவிறக்கம் செய்து, அதனை எம்முடைய பூஜை அறையில் வைத்து, மேற்சொன்ன முறையில் வழிபடவேண்டும்.  மனமுருக பிரார்த்தித்தால் இடம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கி, நல்ல பலன்கள் கிடைப்பதைக் காணலாம். 

இந்த பரிகாரத்தால் பலன் கிடைக்காத சிலர், விரதமிருந்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்கு வியாழக்கிழமையன்று சென்று முருகனை தரிசித்தால் இடம் தொடார்பான பிரச்சினைகள் தானாகவே மறைந்து நல்ல விளைவுகள் ஏற்படுவதைக் காணலாம். 

வேறு சிலருக்கு இந்த மூன்று பரிகாரங்களும் நினைத்தப்படி பலனளிக்கவில்லை என்றால், உங்களுடைய ஜென்ம நட்சத்திரத்திற்கு இருபத்திநான்காம் நட்சத்திரம் என்னவென்பதை அறிந்து, அந்த நட்சத்திரத்திற்குரிய தேவதை, அதி தேவதை, உணவுப் பொருள் ஆகியவற்றை தொடர்ந்து பாவிக்கும் போதும, வழிபடும் போதும் உங்களுடைய இடம் , நிலம் தொடர்பான மறைமுக தடை அகன்று நல்ல பலன்கள் ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம். 

தொகுப்பு : சுபயோகதாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமானுஷ்யமான பாதிப்புகளுக்கு நிவாரணம் தரும் சூட்சம...

2025-02-15 18:39:40
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-02-13 15:34:12
news-image

ஆரோக்கியம் மேம்படுவதற்கான சூட்சும வழிபாடு..!?

2025-02-12 17:06:58
news-image

தன வரவு தடையின்றி வருவதற்கான சூட்சம...

2025-02-11 16:22:28
news-image

கேள யோகம் உங்களுக்கு இருக்கிறதா..?

2025-02-10 16:04:07
news-image

திருவிழாவில் ஒரு இலட்சத்துக்கு ஏலம் போன...

2025-02-09 15:30:14
news-image

காணி தோஷம் அகல பிரத்யேக வழிபாடு..!

2025-02-08 15:54:16
news-image

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான பிரத்யேக தீப...

2025-02-08 11:08:44
news-image

முருகனின் அருளை பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-02-06 17:20:36
news-image

நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

2025-02-05 23:15:14
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்கும் சூட்சம...

2025-02-03 16:17:32
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை..?

2025-02-01 20:35:36