பாலஸ்தீனத்துக்கான ஐ.நா அமைப்பின் பணியாளர்கள் ஹமாஸுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டனரா? : இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு

Published By: Rajeeban

27 Jan, 2024 | 12:54 PM
image

ஓக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பாலஸ்தீனத்திற்கான ஐநா அமைப்பின் பணியாளர்களும் உள்ளனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அந்த அமைப்பிற்கான நிதியை அவுஸ்திரேலியா  இடைநிறுத்தியுள்ளது.

ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலில் தனது அமைப்பை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர் என்ற விபரங்களை இஸ்ரேல் வழங்கியுள்ளது என பாலஸ்தீன அகதிகளிற்கான ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன  குறிப்பிட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிற்கு எதிராக தனது அமைப்பின் எத்தனை பேர் தாக்குதலில் ஈடுபட்டனர் எவ்வகையான தாக்குதலில் ஈடுபட்டனர் என்ற விபரங்களை ஐநா அமைப்பு வெளியிடவில்லை.

இந்நிலையில் அமெரிக்கா கனடா போன்று அகதிகளிற்கான பாலஸ்தீன அமைப்பிற்கான நிதிஉதவியை இடைநிறுத்தியுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பணியாளர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் முழுமையான விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அவுஸ்திரேலியா வரவேற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆபாச வார்த்தை பேசினால் அபராதம்...!

2026-04-12 11:26:56
news-image

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி...

2026-04-12 10:36:35
news-image

அமெரிக்காவின் எதிர்ப்பால் சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை...

2026-04-12 10:22:00
news-image

ஹெய்ட்டியில் சனநெரிசலில் சிக்கி 30 பேர்...

2026-04-12 09:42:50
news-image

அமெரிக்கா–ஈரான் 14 மணி நேர பேச்சுவார்த்தை...

2026-04-12 07:04:54
news-image

பேச்சுவார்த்தையால் அமைதி திரும்பும்: பாகிஸ்தான் பிரதமர்...

2026-04-12 00:02:11
news-image

ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா...

2026-04-11 18:40:49
news-image

போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி : பேஸ்புக்,...

2026-04-11 17:59:18
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமரை...

2026-04-11 17:37:56
news-image

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்...

2026-04-11 18:16:49
news-image

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா...

2026-04-11 15:39:27
news-image

உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு...

2026-04-11 14:21:09