யாழில் புகையிலை கொள்வனவில் நம்பிக்கை மோசடி ; 35க்கு மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

27 Jan, 2024 | 12:46 PM
image

( எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  பகுதியில் வாழும் விவசாயிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள்  நம்பிக்கை அடிப்படையில் அப் பகுதியை சேர்ந்த வியாபாரியிடம் உலர்த்திய புகையிலையை விற்பனைக்காக கொடுத்துள்ளனர்.

எனினும் குறித்த வியாபாரி நம்பிக்கை மோசடி செய்து தலைமறைவாகியமை தொடர்பில் விவசாயிகள் மத்தியில் தெரிய வந்த நிலையில் யாழ்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் ஊடாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கையொப்பம் ஈட்டு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  பகுதியில் வாழும் விவசாயிகள் ஆகிய நாங்கள் கடந்த 2023 ஆண்டு புகையிலைகளை பயிர் செய்து அதனை எங்கள் வாழ்வாதாரமாக மேற்கொண்டோம்.

இந்நிலையில் உலர்த்திய புகையிலைகளை நம்பிக்கை அடிப்படையில் எமது பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிப்பவருக்கு விற்பனை செய்தோம். 

அவர் அதற்கான பணத்தினை கடந்த 2023 ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிக்கு  முன்பு தருவதாக கூறினார். ஆனால் அவர் பணத்தை குறித்த தவணையில் கொடுக்காததால் அது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்தோம்.

இதனையடுத்து பொலிஸார் அவரை கைது செய்து பின்னர் சட்டத்தரணி ஊடாக பிணையில் விடுதலை செய்தனர்.

இந்நிலையில் அவர் பணத்தினை ஜனவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பு வழங்குவதாக சட்டத்தரணி ஊடாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் முன்னிலையிலும் எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்கினார்.

ஆனால் குறித்த திகதியில் நாங்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த போது அவர் சமுகம் தரவில்லை என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. இதனால் 35 பேருக்கு மேற்பட்ட  விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எங்கள் பணத்தினை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்...

2024-12-02 00:30:51
news-image

எயிட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனித...

2024-12-02 00:17:47
news-image

தேசிய பட்டியல் உறுப்பினராக காஞ்சன, ரவி...

2024-12-01 21:40:21
news-image

யாழில் இரு வாரங்களில் 697.4 மில்லி...

2024-12-01 22:32:20
news-image

தேசிய மக்கள் சக்தி மக்களை ஏமாற்றியிருக்கிறது...

2024-12-01 21:39:38
news-image

மாத்தளையில் கொள்ளைச் சம்பவம் ; பொலிஸார்...

2024-12-01 21:34:47
news-image

எரிபொருள் விலை குறைப்பு நியாயமற்றது இந்த...

2024-12-01 20:47:45
news-image

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க...

2024-12-01 20:25:15
news-image

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் பலி!

2024-12-01 19:47:37
news-image

பெரியநீலாவனையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2024-12-01 21:36:27
news-image

தலங்கமையில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்...

2024-12-01 18:23:09
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது...

2024-12-01 21:37:06