மட்டக்களப்பு மாவட்டத்தில் இருநாட்களாய் கடும் மழை பெய்து வருகின்றது. நேற்று காலை 8.30 மணிமுதல் இன்று காலை 8.30 மணிவரையான 24 மணிநேரத்தில் 250 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.

தொடராக பெய்துவரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி, ஏறாவூர், மட்டக்களப்பு, ஆரையம்பதி, வாகரை உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளில் கடும் மழை பெய்துள்ளவதாக வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகளும் மைதானங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை காரணமாக பல பொது நிகழ்வுகளும் பிற்போடப்பட்டுள்ளன. கிழக்கு பல்கலைகழக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

- ஜவ்பர்கான்