(நெவில் அன்தனி)
மாஸ்டர்ஸ் பாஸ்கட்போல் ஸ்ரீலங்காவினால் (இலங்கை மூத்த வீரர்கள் கூடைப்பந்தாட்ட சங்கம்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வருடத்திற்கான மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.
இப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சங்கங்கள் தங்களது விண்ணப்பங்களை பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பி.ஆர்.சி. பார்வையாளர் மண்டபத்தில் சமர்ப்பிக்குமாறு சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த சுற்றுப் போட்டி தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற சங்க செயலாளர் பெசில் சில்வாவை 071 4147013 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு சங்கங்கள் கோரப்படுகின்றன.
இந்தியா, அவுஸ்திரேலியா, மாலைதீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகளும் ஏனைய வெளிநாடுகளில் உள்ள வீரர்களும் இந்த வருட சுற்றுப் போட்டியில் பங்குபற்ற ஆர்வமாக இருப்பதாகவும் அந்த அணிகள் பங்குபற்றும் என நம்புவதாகவும் மாஸ்டர்ஸ் பாஸ்கட்போல் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் கயாத் ஜயசிங்க தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களாக இந்த சுற்றுப் போட்டிக்கு அனுசரணை வழங்கிவரும் கயாத் ஜயசிங்க, முன்னைரைவிட இந்த வருடம் மிகச் சிறப்பாக போட்டிகள் நடத்தப்படும் என்றார்.
கடைசியாக நடத்தப்பட்ட மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இரு பாலாரிலும் 65 அணிகள் பங்குபற்றியதாகவும் இந்த வருடம் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கண்டி, கேகாலை, கொழும்பு, மொறட்டுவை, காலி, அம்பலாங்கொடை, மாத்தறை, குருநாகல் ஆகிய பிரதேசங்களிலிருந்து பல அணிகள் பங்குபற்றுவதற்கான ஆர்வத்தை வெளியிட்டுள்ளதாகவும் கயாத் ஜயசிங்க தெரிவித்தார்.
ஆண்களுக்கான போட்டிகள் 30, 40, 45, 50, 55, 60 ஆகிய வயதுகளுக்கு மேற்பட்ட பிரிவுகளிலும் பெண்களுக்கான போட்டிகள் 30, 40, 45 ஆகிய வயதுகளுக்கு மேற்பட்ட பிரிவுகளிலும் நடத்தப்படும் என மாஸ்டர்ஸ் பாஸ்கட்போல் ஸ்ரீலங்காவின் கௌரவ பொதுச் செயலாளர் பெசில் சில்வா கூறினார்.
வழமைபோல் இந்த வருடப் போட்டிகள் கொழும்பு சுகததாச அரங்கில் நடத்தப்படும். மார்ச் 3, 8, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் காலையிலும் மாலையிலும் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM