மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிவுக்குப்பட்ட மாவடிவேம்பு இராணுவ முகம் அமைந்துள்ள தானியார் காணி ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (07) மீட்க்கப்பட்டுள்ளது.

சித்தாண்டி -1, கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் செல்லத்துரை மகேந்திரன் (வயது 36) என்ற இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் பிற்பகல் வேளை வீட்டுக்கு  (06) வருகைதராதபோது குறித்த குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்கள் தேடிய நிலையில் இன்று (07) காலை மாவடிவேம்பு இராணுவ முகாம் அமைந்துள்ள தனியார் காணியிலுள்ள மரத்தில் கழுத்தில் கயிறு இட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

விடயம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து குறித்த இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதும், உரிய சட்ட நடவடிக்கையை மேற்கொண்டதுடன், மரண விசாரணை அதிகாரி உட்பட தடயவியல் பொலிஸாரும் வருகைதந்து உயிரிழந்தவரின் மனைவி உட்பட உறவினர்களிடம் வாக்குமூலத்தைப் பெற்றதுடன் சடலம் தொடர்பான தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலத்தை சட்டவைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதேவேளை பிரேத பரிசோதனை முடிவடைந்ததும் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

தனது கணவன் கடன்பட்டு வயல் செய்ததாகவும், வேளாண்மைச் செய்கை முற்றுமுழுதாக பாதிப்படைந்ததாகவும், அதன் பின்னர் செங்கல் உற்பத்தி செய்தாகவும் அண்மையில் ஏற்ப்பட்ட மழை காரணமாக செங்கல் உற்பத்தி முற்றுமுழுதாக பாதிப்படைந்துள்ளதாகவும், பணப் பிரச்சனை காரணமாக மன விரத்தியில் இவ்வாறு செய்து இருக்கலாம் என உயிரிழந்தவரின் மனைவி தனது வாக்மூலத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.