மூன்று பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை திறைச்சேரிக்கு செலுத்தியுள்ளோம் - லிட்ரோ நிறுவனம்

26 Jan, 2024 | 06:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மூன்று பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை திறைச்சேரிக்கு செலுத்தியுள்ளோம். பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்த லிட்ரோ நிறுவனம் தற்போது இலாபமடைந்துள்ளது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள லிட்ரோ நிறுவனத்தின் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் லிட்ரோ நிறுவனம் ஸ்ரீ லங்கா காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு 1.5 பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை செலுத்தியுள்ளோம்.

தற்போது 1.5 பில்லியன் ரூபாய் இலாப வருமானத்தை ஸ்ரீ லங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம் ஊடாக திறைச்சேரிக்கு செலுத்தியுள்ளோம்.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக பதவியேற்கும்போது நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. முறையான முகாமைத்துவம் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாக நிறுவனம் தற்போது இலாபமடைந்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டரின் பாதுகாப்புத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொது காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியை முகாமைத்துவம் செய்து எரிவாயு சிலிண்டரின் விலையை ஸ்திரமான நிலையில் பேணுகிறோம். எரிவாயு விலை அதிகரிப்பால் நிறுவனத்துக்கு சொற்பளவிலான இலாபமே கிடைக்கப் பெறுகிறது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று...

2025-03-17 16:27:28
news-image

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2025-03-17 16:26:43
news-image

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி எமது...

2025-03-17 16:48:51
news-image

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதியர்கள்...

2025-03-17 16:00:41
news-image

'வெலே சுதா'வின் சகோதரன் 'தாஜூ' கைது!

2025-03-17 15:35:07
news-image

சிவப்பிரகாசம் காண்டீபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து...

2025-03-17 15:30:37
news-image

மட்டக்களப்பில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்கு...

2025-03-17 15:43:38
news-image

குருநாகலில் சேவல் சின்னத்தில் களமிறங்கும் இலங்கை...

2025-03-17 15:28:13
news-image

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் பதாகைகளை...

2025-03-17 15:05:13
news-image

பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம்...

2025-03-17 14:53:47
news-image

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க சாதாரண...

2025-03-17 14:42:32
news-image

நுவரெலியாவில் அரச தாதியர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

2025-03-17 13:43:35