இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களது விதியை நொந்தபடியே பணியாற்றிக் கொண்டு கிடைக்கும் சொற்ப வருவாயில் குடும்பத்தை நடத்தி வருவர். ஏதாவது கேட்டால்“வாங்கி வந்த வரம் அப்படி” என சலித்துக்கொள்வர்.
அத்துடன் ‘கர்மவினைகள் கொடிது’ என்றும் எடுத்துரைப்பர். பொதுவாக எம்முடைய முன்னோர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் தனித்துவமான சிறப்பம்சம் உண்டு என்பர். அவர்கள் கர்ம வினைகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்களுக்கும் பிரத்யேக பரிகாரத்தை முன்மொழிந்து, அவர்களையும் காத்திடச் செய்திருக்கிறார்கள்.
உங்களுடைய ஜாகதத்தில் எந்த இடம் வலிமை குறைவாக இருக்கிறது என்பதை அனுபவமிக்க சோதிடரை அணுகி, உங்களது ஜாகதத்தைக் காண்பித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவரது ஜாதகத்தில் திரிகோண ஸ்தானம் எனப்படும் 1,5,9 ஆகிய இடங்கள் வலு குறைந்து காணப்பட்டால், உங்களுக்கு அறிமுகமான அல்லது அறிமுகமற்ற யாரேனும் ஒருவரின் மரணத்திற்கு சென்று, அங்கு நடைபெறும் இறுதிச் சடங்கு காரியங்களில் உடனிருந்து, அவரது அஸ்தி கரைக்கும் வரை உதவி செய்தால்... 1, 5, 9 ஆகிய மூன்று இடங்களும் வலுவடைந்து பலன் தரும்.
அதே சமயத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் 3,7,11ஆகிய மூன்று இடங்கள் வலுவிழந்து காணப்பட்டால்.. உங்களுக்கு அறிமுகமான அல்லது அறிமுகமற்ற கேட்கும் திறன் சவால் உள்ள மாற்றுதிறனாளிக்கு. அவர்களுக்கு காது கேட்கும் கருவி வாங்கி, அவரை கேட்க வைத்து விட்டால்.. உங்களுடைய முயற்சி ஸ்தானம் எனச் சொல்லப்படும் மூன்றாமிடம் வலுவடைந்து, அதனால் உங்களது முயற்சி வெற்றியைத் தரும்.
ஒருவருடைய ஜாகதத்தில் ஏழாமிடம் வலு இழந்திருந்தால்..ஏழை பெண்களுக்கு திருமணம் செய்ய அனைத்து உதவிகளையும் செய்தால்.. களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவம் வலிமைப் பெற்று, நீங்கள் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழலாம்.
ஒருவருடைய ஜாதகத்தில் பதினோராமிடம் வலுவிழந்து, எதிர்நிலையான பலன்கள் கிடைத்தால்..அருகிலுள்ள ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கும் போது கலசம் அல்லது கலசங்கள் வாங்கி தந்தால்..பாதகாதிபதியாக இருந்தாலும்.. லாபாதிபதி வலிமைப் பெற்று உங்களுக்கு லாபம் வரத் தொடங்கும்.
ஒருவருடைய ஜாகதத்தில் நான்காமிடம் வலு இழந்திருந்தால்..பெற்ற தாய்க்கு பாத பூஜை செய்தால்.. நான்காமிடம் வலிமைப் பெற்று பலன் தரத் தொடங்கும். நான்காமிடம் என்பது வீடு, வாகனத்தையும் குறிக்கும் என்பதால், இது தொடர்பான முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். உடனே எம்மில் சிலர் எம்மைப் பெற்ற தாய் மரணமடைந்துவிட்டார்.
நாம் என்ன செய்ய இயலும்? என கேட்பர். நீங்கள் தாயாக மதிக்கும் ஒரு பெண்மணிக்கு பாத பூஜை செய்தாலும் பலன் கிடைக்கும்.
ஒருவருடைய ஜாகதத்தில் எட்டாமிடம் வலு இழந்திருந்தால்..அருகிலுள்ள ஆலயத்திற்கு உண்டியல் வாங்கிக் வைத்தால்.. எட்டாமிடம் பலன் தரத் தொடங்கும்.
ஒருவருடைய ஜாகதத்தில் பன்னிரண்டாமிடம் வலு இழந்திருந்தால்.. ஆதரவற்ற ஒருவரின் பிரேதத்தை அடக்கம் செய்தால்.. அயன சயன ஸ்தானம் எனப்படும் இடம் வலிமைப் பெற்று தூக்கமின்மை பிரச்சினை அகலும். மேலும் ஏராளமான பலன்களும் கிட்டும்.
உங்களுடைய ஜாதகத்தில் தோஷங்கள் அதிகமிருந்தாலோ அல்லது ஏதேனும் குறைகள் இருந்தாலோ.. அதை ஒரு தாமிர தகட்டில் எழுதி, அதனை அருகில் கும்பாபிஷேகம் நடக்கும் ஆலயத்தில் உள்ள யாகசாலையில் ஏதேனும் ஒரு கலசத்திற்கு அருகே வைத்து விட வேண்டும்.
கும்பாபிஷேகம் நடந்த பிறகு அந்த தாமிர தகட்டில் எழுதிய ஜாதகத்தை வீட்டில் வைத்து பூஜை செய்தால்.. உங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷம் விலகும். பலன்கள் நீங்கள் எதிர்பாராமல் நடைபெறும்.
எமக்கு அனைத்தும் இருந்தும் கர்ம வினைகளால் எதிர்நிலையான பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இது ஏதாவது பரிகாரம் இருக்கிறதா? எனக் கேட்டால்,, எம்முடைய முன்னோர்கள் எடுத்துரைத்த உப்பு பரிகாரத்தைக் குறிப்பிடலாம்.
இதற்கு ஒன்பது தலைவாழை இலை, உப்பு, சூடம், பால், பூமாலை, கத்திரிக்கோல், மனைப்பலகை ஆகிய பொருட்களைச் சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
சற்று விஸ்தாரமான இடத்தை தெரிவு செய்து, யாருடைய கர்மவினைகள் அகலவேண்டுமோ.. அவர் ஒரு மனைபலகையில் அமரவேண்டும். அவரைச் சுற்றி ஒன்பது தலை வாழையிலைகளை போட வேண்டும்.
ஒன்பது இலையிலும் கூறுகளாக உப்பை இடவேண்டும். கர்மவினைகளைத் தொலைக்கும் நபரின் கழுத்தில் முன் பக்கமாக ஒரு மாலையும், பின் பக்கமாக ஒரு மாலையும் அணிந்துகொள்ளவேண்டும்.
அதன் பிறகு சூடம் ஏற்ற வேண்டும். சூடம் அனையும் வரை மனதுள் எம்முடைய முந்தைய பிறவி கர்மவினைகள், அப்பா வழி கர்ம வினைகள், இந்த ஜென்மத்தில் உள்ள கர்மவினைகள் அனைத்து அகன்று நல்லருள் கிடைக்கவேண்டும் என பிரார்த்திக்கவேண்டும்.
சூடம் அணைந்த பின் அவர்கள் எழுந்து நிற்கவேண்டும். அவர் மீது ஒரு குடம் பாலை தலையில் ஊற்ற வேண்டும். பிறகு மாலையை அறுத்து முன்னும் பின்னும் போடவேண்டும். நின்ற இடத்திலிருந்து வலது காலை எடுத்து வைத்து அந்த தலைவாழை இலையைத் தாண்டி வந்தால்.. உங்களது கர்ம வினை தீரும். இந்த சக்திமிக்க பரிகாரத்தினை மேற்கொண்ட ஒராண்டிற்குள் ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சியையும் காண்பீர்.
தகவல் : மாரிமுத்து
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM