நடிகர் தீரஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘டபுள் டக்கர்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சூர்யா தன்னுடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் படம் ‘டபுள் டக்கர்’. இதில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், எம் எஸ் பாஸ்கர், காளி வெங்கட், கோவை சரளா, யாஷிகா ஆனந்த், கருணாகரன், முனிஷ்காந்த், சுனில், சிவ ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகனுடன் முக்கிய வேடத்தில் இரண்டு அனிமேடட் கதாப்பாத்திரங்களும் நடித்திருக்கின்றன. கௌதம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.
ஃபேண்டஸி கொமடி ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை எயர் ஃபிளிக் புரொடக்சன் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படபிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகனுடன் தோளில் இரண்டு அனிமேஷன் செய்யப்பட்ட கதாப்பாத்திரங்கள் இணைந்திருப்பதால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
மேலும் இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM