தூக்குதுரை - விமர்சனம்

26 Jan, 2024 | 05:54 PM
image

தயாரிப்பு : ஓப்பன் கேட் பிக்சர்ஸ்

நடிகர்கள் : யோகி பாபு, இனியா, மறைந்த நடிகர்  ஜி. மாரிமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன், பால சரவணன், மகேஷ் சரவணன் மற்றும் பலர்.

இயக்கம் : டென்னிஸ் மஞ்சுநாத்

மதிப்பீடு :  2 / 5

யோகி பாபு நடித்திருக்கிறார்... கொமடியான பேய் படம்... என விளம்பரம் செய்யப்பட்டதால்  ரசிகர்கள் பட மாளிக்கைக்கு சென்றனர். இவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன்  தூக்குதுரை இருந்ததா? இல்லையா? என்பதை தொடார்ந்த காண்போம். 

மன்னர் ஒருவர் தன் ஆளுகைக்குட்பட்ட மக்கள் பசியாறுவதற்காக கோயில் எழுப்பி, அதன் கீழ்ப்பகுதியில் தானிய கிடங்குஒன்றை உருவாக்கி, தானியத்தை சேமித்து வைக்கிறார்.

பஞ்சம் ஏற்படும் போது அதிலிருந்து எடுத்து மக்களின் பசியைப் போக்குகிறார். ஆனால் விதி விளையாடுகிறது. மீண்டும் அந்த ஊரில் பஞ்சம் ஏற்பட, தன் மக்கள் பசியால் வாடுகிறார்களே.. என மனதுக்குள் வருந்தி, அந்த ஊர் காவல் தெய்வமான நெமிலியம்மனிடம் பிரார்த்திக்கிறார்.

பின்னர் தன் கழுத்தை அறுத்து அதனை பலியிடுகிறார். மக்கள் மீது மன்னனுக்கு இருக்கும் கரிசனையைக் கண்ட அம்மன், மழை பெய்ய வைத்து, அந்த ஊரை வளப்படுத்துகிறார்.

  தலையை அறுத்துக்கொண்ட மன்னன் தலை மீது அணிந்திருந்த கீரிடத்தை ஒவ்வொரு ஆண்டும் அந்த ஊர் அம்மன் திருவிழாவின் போது அம்மனுக்கு முன் வைத்து வணங்குகிறார்கள். தற்காலத்தில் இந்த மன்னரின் வம்சத்தைச் சேர்ந்த மாரிமுத்துவும், அவரது தம்பியும் இந்த கீரிடத்தை யார் வைத்துக்கொள்வது என்பதில் பிரச்சினை உருவாகிறது. இந்த பிரச்சினை எப்படி சரியாகிறது? என்பது தான் இப்படத்தின் கதை.

யோகி பாபு ஊர் திருவிழாவில் சினிமா படத்தை காண்பிப்பவரக நடித்திருக்கிறார். இவருக்கும், அந்த ஊர் பெரிய மனிதரின் மகளான இனியாவிற்கும் காதல் மலர்கிறது. இந்த காதலை ஊர் மக்கள் பிரித்ததுடன், யோகி பாபுவை அந்த ஊரில் உள்ள கிணற்றில் தள்ளி எரித்து கொலை செய்துவிடுகிறார்கள். அவரது ஆவி அந்த ஊருக்குள் உலவுகிறது. அவர் செய்யும் அலப்பறைகளால் கிராம மக்கள் அதிர்ச்சியடைகிறார்கள். 

இந்நிலையில் ராஜ வம்சத்து கீரிடம் அந்த ஊர் கிணற்றில் இருக்கிறது. அதை எடுப்பதற்காக மாரிமுத்துவின் மகன் தலைமையிலான குழு அந்த கிணற்றில் இறங்குகிறது. இவர்கள்  அட்காசம் செய்யும் யோகிபாபுவின் ஆவியைக் கடந்து அந்த கிரீடத்தை எடுத்துவிடுகிறார்கள். 

கதையாக கேட்கும் போது கொமடியாக இருக்கும் இந்த கதைக்கு திரைக்கதையாக மாற்றும் போது பெரும்பாலான இடங்களில் சிரிப்பு வரவில்லை. சொல்லவருவது பேய்க் கதை இதற்கு எதற்கு லாஜிக்.? மேஜிக் செய்து ரசிகர்களை சிரிக்கவைக்காமல்.. நோகடித்திருக்கிறார்கள். அதிலும பால சரவணன் மூச்சு விடாமல் பேசி சிரிப்பை வரவழைக்க செய்யும் முயற்சி அவருடைய உடல்மொழியால் வீணாகிறது.

யோகிபாபு ஒன்லைன் பஞ்சுகளால் வழக்கம் போல் வசீகரிக்கிறார். இனியா..  இனி அக்கா, அண்ணி, அம்மா கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமே பொருந்துவர். 

படத்தில் பாராட்டப்படவேண்டிய அம்சம் கிராபிக்ஸ். ஓரளவு நேர்த்தியாக வடிவமைத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, கலை இயக்கம், படத் தொகுப்பு, பின்னணியிசை என அனைத்தும் உயர்தரம்.

தூக்குதுரை - கட்டதுரை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனுஷ் இயக்கும் ' நிலவுக்கு என்...

2024-12-12 15:38:08
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'அறிவான்'...

2024-12-12 15:38:42
news-image

ரட்சிதா மகாலட்சுமி நடிக்கும் 'எக்ஸ்ட்ரீம்' படத்தின்...

2024-12-11 17:37:18
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட நடிகர்...

2024-12-11 17:04:42
news-image

நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம்: முதல்வர்...

2024-12-11 17:04:15
news-image

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின்...

2024-12-10 18:41:08
news-image

பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் சீயான் விக்ரமின்...

2024-12-10 15:06:20
news-image

ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன்

2024-12-10 14:14:17
news-image

வசூலில் அதிரடி காட்டும் அல்லு அர்ஜுனின்...

2024-12-10 14:09:49
news-image

இறுதி கட்டத்தில் கௌதமன் நடிக்கும் '...

2024-12-10 14:10:21
news-image

விஜய் தேவரகொண்டா வெளியிட்ட நடிகை ராஷ்மிகா...

2024-12-10 14:10:48
news-image

இயக்குநர் பேரரசு தொடங்கி வைத்த 'சதுரங்க...

2024-12-10 12:14:23