புத்தளம் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் மறைவைத் தொடர்ந்து 2024 ஜனவரி 25ஆம் திகதி முதல் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் சார்பில் பாராளுமன்ற பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சார்பில் இதனை அறியத் தருவதாக பிரதிச் செயலாளர் நாயகம் இந்தக் கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கந்தானை பகுதியில் வியாழக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
சனத் நிஷாந்தவின் மறைவையொட்டி ஏற்பட்டுள்ள பாராளுமன்ற வெற்றிடத்துக்கு 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பொதுஜன போட்டியிட்ட ஜகத் பியங்கரவின் பெயர் தேர்தல் தெரிவத்தாட்சி பத்திரத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM