பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் (24) முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நிலுவைத் தொகையை செலுத்தாதன் காரணமாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மின்சார கட்டண நிலுவைத் தொகை 877,741 ரூபா என ரயில்வே அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்த மின்சார துண்டிப்பின் காரணமாக குப்பி விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .
அத்துடன் ஒலிபெருக்கி மூலம் ரயில் நிலையத்தில் அறிவிப்புகள் செய்யப்படுவதில்லை எனவும் டிக்கெட் வழங்குவதற்கு குப்பி விளக்குளை பயன்படுத்துவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .
கடந்த 24ஆம் திகதி ரயில்வே திணைக்களத்தினால் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான காசோலை வழங்கப்பட்ட போதிலும் ரயில் நிலையத்தில் மின்சாரம் இன்று (26) வரை துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய தகவலின் படி இன்று வெள்ளிக்கிழமை (26) 12 .30 மணியளவில் பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கான மின்சாரம் மீள வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM