19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை!

26 Jan, 2024 | 12:00 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 16 நாடுகளுக்கு இடையிலான ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 'சி' குழுவில் இடம்பெறும் இலங்கை, சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

ஆபிரிக்க நாடுகளான ஸிம்பாப்வேயை டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 36 ஓட்டங்களாலும் நமிபியாவை 77 ஓட்டங்களாலும் வெற்றி கொண்டதன் மூலம் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை முன்னேறியுள்ளது.

இந்த இரண்டு போட்டிகளைத் தொடர்ந்து தனது குழுவில் இடம்பெறும் பலம்வாய்ந்த அவுஸ்திரேலியாவை கிம்பர்லியில் நாளை சனிக்கிழமை (27) நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டியில் இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

இரண்டு அணிகளும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் விளையாட தகுதிபெற்றுவிட்டதால் கடைசி லீக் போட்டி முடிவு இரண்டு அணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை.

இந்த வருட இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் றோயல் கல்லூரி வீரர் சினேத் ஜயவர்தனவின் தலைமையிலான இலங்கை அணி பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை.

ஸிம்பாப்வே அணிக்கு எதிரான தனது ஆரம்பப் போட்டியில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான தினுர கலுபஹன (60), ஷாருஜன் சண்முகநாதன் (41 ஆ.இ.), ரவிஷான் டி சில்வா (31), ருசந்த கமகே (31) ஆகியோர் நிதானமாகத் துடுப்பெடுத்தாடியதன் பலனாக இலங்கை 204 ஓட்டங்களைப் பெற்றது.

மல்ஷா தருப்பதி 4 விக்கெட்களையும் ருவிஷான் பேரேரா, விஷ்வா லஹிரு ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றி ஸிம்பாப்வேயை 89 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர்.

நமிபியாவுக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில்  இலங்கை  பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட து. 

எனினும், சுப்புன் வடுகே மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்று இலங்கை 133 ஓட்டங்களை மொத்த எண்ணிக்கையாக பெற உதவினார்.

பந்துவீச்சில் ருவிஷான் பெரேரா, விஷ்வா லஹிரு ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் தினுர கலுபஹன 2 விக்கெட்களையும் கைப்பற்றி நமிபியாவை 56 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி இலங்கையை 77 ஓட்டங்களால் வெற்றிபெற உதவினர்.

இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை இளையோர் அணியின் ஆட்டத்திறன்கள் திருப்திகரமாக அமையவில்லை.

இந் நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டியில் வெற்றிபெறுவதாக இருந்தால் இலங்கை அணி சகல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்த வேண்டிவரும்.

இக் குழுவில் ஸிம்பாப்வேயை 225 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்ட அவுஸ்திரேலியா, 2ஆவது போட்டியில் நமிபியாவிடம் கடும் சவாலை எதிர்கொண்டு 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

எனவே, நமிபியாiவிட திறமையாக இலங்கை பந்துவீசினாலன்றி அவுஸ்திரேலியாவை வெற்றிகொள்வது இலகுவல்ல.

இது இவ்வாறிருக்க, ஏ குழுவிலிருந்து இந்தியாவும் பி குழுவிலிருந்து இங்கிலாந்தும், டி குழுவிலிருந்து பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளும் சுப்பர் சிக்ஸில் விளையாடுவதை உறுதி செய்துகொண்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20