வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரராக கோஹ்லி

25 Jan, 2024 | 06:12 PM
image

(நெவில் அன்தனி)

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை இந்தியாவின் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி வென்றெடுத்துளார்.

கடந்த வருடம் 27 சர்வதேச ஒருநாள் போட்டிளில் 6 சதங்கள், 9 அரைச் சதங்களுடன் 1377 ஓட்டங்களைக் குவித்தார். (சராசரி 72.47 ஸ்ட்ரைக் ரேட் 99.13). ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்ததுடன் 16 பிடிகளை எடுத்திருந்தார்.

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின்போது 50ஆவது சதத்தைக் குவித்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுகல்ரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராத் கோஹ்லி முறியடித்திருந்தார்.

உலகக் கிண்ணப் போட்டியில் 11 தடவைகள் துடுப்பெடுத்தாடிய விராத் கோஹ்லி 3 சதங்கள், 5 பவுண்டறிகளுடன் 765 ஓட்டங்களைக் குவித்து உலகக் கிண்ண தொடர் நாயகியானார்.

அதிசிறந்த ஐசிசி மத்தியஸ்தர் விருது

வருடத்தின் அதிசிறந்த ஐசிசி மத்தியஸ்தர் விருதை இங்கிலாந்தின் ரிச்சர்ட் இலிங்வேர்த் வென்றெடுத்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்