(இராஜதுரை ஹஷான்)
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராக ஜகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பெறுபேறுகளின் பிரகாரம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் புத்தளம் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட வேட்பாளர்களின் பட்டியலில் சனத் நிஷாந்தவுக்கு அடுத்தபடியாக ஜகத் பிரியங்கர உள்ளார். இவர் 45,272 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு புத்தளம் மாவட்டத்துக்கு ஐந்து ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன.
அருந்திக பெர்னாண்டோ, சிந்தக்க அமல் மாயாதுன்ன, பியங்கர ஜயரத்ன, அசோக பியந்த, சனத் நிஷாந்த ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட சனத் நிஷாந்த 80,082 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.
--
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM