புத்தளம் - ஆனமடுவ, லபுகம பகுதியில் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இராணுவவீரரும் அவரது மகனும் உயிரிழந்துள்ள நிலையில் மனைவி படு காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
நவகத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஜீவக செனவிரத்ன என்ற இராணுவவீரரும் 10 வயதுடைய அவரது மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தின் போது இராணுவவீரர் தனது மனைவி மற்றும் மகனுடன் ஆனமடுவ - நவகத்தேகம பிரதான வீதியில் லபுகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது அங்குள்ள விகாரைக்கு முன்பதாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரப்பலகை ஏற்றிச்சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றள்ளது.
விபத்தில் காயமடைந்த இராணுவவீரரின் மனைவி சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM