தமிழ் மற்றும் மலையாள மொழியில் தயாராகி வரும் ‘பெர்த்மார்க்’ எனும் திரைப்படத்தில் ‘ஜெயிலர்’ படப்புகழ் நடிகை மிர்னா, கதையின் நாயகியாக ஜெனி எனும் கதாப்பாத்திரத்தில் கர்ப்பிணி பெண்ணாக நடித்து அசத்தியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.
இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பெர்த்மார்க்’. இதில் ‘சர்பட்டா பரம்பரை’ புகழ் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர்.வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகியிருக்கும் இந்த படத்தை சேப்பியன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் ஸ்ரீராம் சிவராமன் மற்றும் விக்ரம் ஸ்ரீதரன் ஆகீயோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தின் படபிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை மிர்னா கர்ப்பிணி பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
படத்தைப்பற்றி நடிகை மிர்னா பேசுகையில்,“ இந்த படத்தின் கதையை இயக்குநர் விவரித்தபோது நடிப்பதற்கு சவால் மிக்க கதாப்பாத்திரம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த படத்தில் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணாகவும், ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணாகவும் நடித்திருக்கிறேன்.
இதற்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட எடை கூடிய புரொஸ்தடீக் ஒப்பனையை அணிந்து நடித்திருக்கிறேன். நான் உள்ளிட்ட சக கலைஞர்கள் அனைவரும் கடினமாக உழைத்து இயக்குநரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறோம். இந்த படம் வெளியான பிறகு நிச்சயம் பேசப்படும்” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM