இன்றைய சூழலில் நாற்பத்தைந்து வயதைக் கடந்த பெண்மணிகளுக்கு மாதவிடாய் சுழற்சி என்பது ஏற்படாமல் போகும். அவர்கள் பூப்பெய்திய தருணத்திலிருந்து இதுவரை சீராகவோ அல்லது சீறற்றதாகவோ நடைபெற்று வந்த மாதவிடாய் சுழற்சி என்பது நாற்பத்தைந்து வயதைக் கடந்த பெண்மணிகளுக்கு நின்றுவிடும்.
சில பெண்மணிகளுக்கு இதன் பிறகு ரத்தப்போக்கு என்பது ஏற்படக்கூடும். இது ஆபத்தானதா..? என கேட்டால், ஆம்! ஆபத்தானது தான். இது குறித்த முழுமையான விழிப்புணர்வை பெறுவதுடன், மருத்துவ ஆலோசனையையும் ,சிகிச்சையையும் பெற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஈஸ்ட்ரோஜன் எனும் பெண்களுக்கான பிரத்யேக ஹோர்மோனின் சுரப்பில் தடை ஏற்படுவதாலும், இத்தகைய ஹோர்மோன் சுரப்பி சுரக்காததால் கர்ப்பப்பை வாய் பகுதியில் உள்ள மெல்லிய திசுக்களும், சிறிய அளவிலான ரத்த நாளங்களும் மேலும் வலுவிழந்து, அளவில் சிறியதாகி இரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய ரத்தப்போக்கு பெரும்பாலும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. ஆனால் பத்து சதவீத பெண்மணிகளுக்கு இத்தகைய ரத்தப்போக்கு புற்றுநோய் பாதிப்பின் அறிகுறியாக மாறுகிறது.
ஈஸ்ட்ரோஜன் எனும் ஹோர்மோன் சுரப்பி சுரந்து கொண்டிருக்கும்போது பெண்களுக்கு இதயம், சிறுநீரகம், தோல் ஆகியவை எந்த பாதிப்பில்லாமல் சீராக இயங்கும் என்றும், இத்தகைய சுரப்பியின் செயல்பாடு நின்று விட்டால்.. எந்த சிறிய அறிகுறிகளையும் துல்லியமாக அவதானித்து மருத்துவரிடம் தெரிவித்து அதற்கான ஆலோசனையையும், சிகிச்சையும் பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அதனால் மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்கள் அணுகி அவர்கள் பரிந்துரைக்கும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மற்றும் திசு பரிசோதனையை மேற்கொண்டு பாதிப்பினை துல்லியமாக அவதானிக்க வேண்டும்.
பரிசோதனையில் அவை புற்றுநோயின் பாதிப்பு என உறுதிப்படுத்தப்பட்டால்..! அவை தொடக்க நிலையில் இருந்தால், ஒருங்கிணைந்த மற்றும் பிரத்யேக சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்கலாம்.
வைத்தியர் ஷாலினி - தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM