காரிய சித்தியை நினைத்தபடி நடக்க பிரத்யேக தீப வழிபாடு

24 Jan, 2024 | 05:37 PM
image

எம்மில் பலரும் தங்களது வாழ்க்கையில் முன்னேற கடினமாக உழைக்கவும் தயாராக இருப்பார்கள். புத்திசாலித்தனமாக உழைக்கவும் தயாராக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கான வாய்ப்பு என்பது மிக மிக அரிதாகவே கிடைக்கும். இந்த வாய்ப்பை உருவாக்குவது எப்படி? அல்லது உருவாக்கிக் கொள்வது எப்படி? என்பதில் தான் எம்முடைய வெற்றிக்கான சூத்திரம் அடங்கி இருக்கிறது. பெரும்பாலோர் தாங்கள் நினைத்தபடி காரியம் நடைபெற வேண்டும் என மனதிற்குள் பிரார்த்திப்பார்கள். 

ஆனால் அந்தக் காரியம் நண்பர்களாலோ உறவினர்களாலோ அல்லது முகம் தெரியாத நபர்களாலோ நிறைவேறாமல் போகக் கூடும். இந்நிலையில் நீங்கள் ஒரு காரியத்தை செய்ய நினைத்திருந்தால் அதற்கான வழிமுறைகளை உறுதியாக தெரிந்து இருந்தால்  நீங்கள் அதனை அடைவதற்கு பிரத்யேக தீப வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.

இந்த வழிபாட்டிற்காக எந்த ஆலயத்திற்கும் செல்லத் தேவையில்லை. உங்களுடைய பூஜை அறை அல்லது பிரார்த்தனை அறையிலேயே இதனை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதற்கு முன்  மண்ணாலான நாற்பத்தெட்டு புதிய அகல் விளக்குகள், சுத்தமான மரச்செக்கால் செய்யப்பட்ட நல்லெண்ணெய், பஞ்சுத்திரி, பனங்கருப்பட்டி ஆகியவற்றை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். 

பிரம்ம முகூர்த்த நேரம் எனக் குறிப்பிடப்படும் அதிகாலை 3.30 மணி முதல் 5. 30 மணிக்குள்ளாக இந்த 48 விளக்குகளை எண்ணெய், திரி ஆகியவை இட்டு விளக்கேற்ற வேண்டும். அதில் சிறிதளவு பனங்கருப்பட்டியை தூளாக்கி எரியும் தீபத்தில் இடவேண்டும். இதனை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும். இதன் போது நீங்கள் மனதுக்குள் பிரார்த்திக்கும் எந்த காரியமாக இருந்தாலும் நினைத்தபடி நடப்பதை அனுபவத்தில் கண்டு மகிழ்ச்சி அடையலாம்.

திருமண தடையாக இருந்தாலும்  மகப்பேறு பிரச்சனை இருந்தாலும்.. வேலை வாய்ப்பு கிடைக்காத பிரச்சனையாக இருந்தாலும்  என எந்த சிக்கலாக இருந்தாலும்  இத்தகைய பிரத்யேக தீப வழிபாட்டின் மூலம் அதற்கான தீர்வு கிடைத்து  உங்களுடைய எண்ணம் ஈடேறும்.

தொகுப்பு : சுபயோக தாசன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வ நிலையை மேம்படுத்தும் கொட்டையூர் கோடீஸ்வரர்...

2024-04-15 17:19:54
news-image

அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி தரும் செந்தலை...

2024-04-11 10:43:09
news-image

சிறுநீரக கோளாறுகளை நீக்கி அருள் புரியும்...

2024-04-09 17:37:27
news-image

வாஸ்து தோஷமும், பித்ரு தோஷமும் நீக்கி...

2024-04-08 18:31:07
news-image

பெண்மணிகள் தீர்க்க சுமங்கலியாக வாழ அருள்...

2024-04-05 20:56:43
news-image

குழந்தை வரம் அருளும் வழுவூர் வீரட்டானேஸ்வரர்...

2024-04-04 15:21:26
news-image

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் -...

2024-04-04 15:24:18
news-image

புண்ணியத்தை அள்ளித் தரும் ஸ்ரீ வாஞ்சியம்...

2024-04-03 12:56:05
news-image

சித்தர்கள் அருளிய கோமுகி தீர்த்த பரிகாரம்

2024-04-02 14:21:11
news-image

துயர் களையும் தீப பரிகார வழிபாடு

2024-04-01 17:32:20
news-image

முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் தோஷங்களை விலக்கி,...

2024-03-24 21:02:46
news-image

சனி தோஷத்தை நீக்கும் ஆலய பரிகாரம்..!

2024-03-20 09:18:25