இந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இந்திய அணி 75 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி 274 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் புஜாரா 92 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஹெஷல்ஹுட் 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 188 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 112 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

ஆஸி அணி சார்பில் ஸ்மித் 28 ஓட்டங்களை பெற, இந்திய அணி சார்பில் அஷ்வின் 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.